Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை: டோக்கன் முறையில் பெட்ரோல் விநியோகம்..10 கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் கியூவில் காத்திருப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் டோக்கன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலை பெறுவதற்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் மிக நீண்ட கியூ வரிசைகளில் பல மணிநேரங்கள் காத்திருக்கும் அவலமும் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் 2 வார காலத்துக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் தடை செய்யப்பட்டது. இலங்கை முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது.

 10 Km Long queues form at Sri Lanka petrol stations

இன்னொரு பக்கம் இலங்கையில் மக்களின் தன்னெழுச்சி கிளர்ச்சி மிக உக்கிரமாகவும் உள்ளது. இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் உல்லாச வாழ்க்கையை வெளி உலகத்துக்கு பொதுமக்கள் பகிரங்கப்படுத்தினர்.

இப்போதும் கோத்தபாயவின் ஜனாதிபதி மாளிகையில் கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டுள்ளனர். கிளர்ச்சியாளர் குழுக்களிடையே மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் கொழும்பில் பதற்றமான சூழ்நிலையும் நிலவுகிறது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலைப் பெறுவதற்காக பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கியூவில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் இரு சக்கர வாகனங்களை டெம்போக்களில் ஏற்றிக் கொண்டு வந்து பெட்ரோல், டீசல் பெற்று செல்கிற காட்சிகளையும் காண முடிந்தது. இலங்கையில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளைப் பெற கியூவில் காத்திருந்து 15பேர் மரணம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+