கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை அரசு புள்ளி விவரப்படி 89,000 தமிழ் விதவைகள்... வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாகும் துயரம்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அரசின் புள்ளி விவரப்படி தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்களில் 89,000 தமிழ் விதவைகள் இருக்கின்றனராம். மேலும் வாழ்வாதரத்துக்காக வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று கொத்தடிமையாகும் துயரத்தையும் தமிழ் விதவைகள் எதிர்கொள்கின்றனர்.

அதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் எச்சரிக்கை! அதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் எச்சரிக்கை!

இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழர்களின் துயரம் புதிய வடிவத்துக்கு போனது. இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பொதுமக்கள், சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் கதி என்ன என்பது 12 ஆண்டுகளாகியும் தெரியவில்லை.

89,000 தமிழ் விதவைகள்

89,000 தமிழ் விதவைகள்

அதனால்தான் காணாமல் போனோர் கதியை சொல்லுங்கள் என இடைவிடாத போராட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் 89,000 தமிழ்ப் பெண்கள் விதவைகள் இருக்கின்றனர் என்கிறது 2010-ம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளி விவரம்.

அதிர்ச்சி புள்ளி விவரம்

அதிர்ச்சி புள்ளி விவரம்

இவர்களில் 49,000 பேர் கிழக்கு மாகாணத்திலும் 40,000 பேர் வடக்கு மாகாணத்திலும் வாழ்கின்றனர். இவர்களில் 40 வயதுக்கு கீழே இருப்பவர்கள் 12,000 பேர். 3 குழந்தைகளுக்கு தாயாக இருப்பவர்கள் எண்ணிக்கை 8,000.

உதவித் தொகை எவ்வளவு?

உதவித் தொகை எவ்வளவு?

கணவர் இறந்தது தொடர்பான சான்றிதழ் கொடுத்தால் ரூ50,000 உதவித் தொகையை இலங்கை அரசு வழங்கும். காணாமல் போனோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் வெறும் ரூ150 மட்டும்தான் மாதந்தோறும் கிடைக்கும். இப்படியான துயரம் சூழ்ந்த நிலையில் இடைத்தரகர்கள் மூலம் வளைகுடா நாடுகளில் பணிப்பெண் வேலைக்கு செல்ல முடிவெடுக்கின்றனர் தமிழ் விதவைகள்.

வளைகுடா நாடுகளில் துயரம்

வளைகுடா நாடுகளில் துயரம்

மாதந்தோறும் ரூ30,000 ஊதியம் கிடைக்கும் என்பதை நம்பித்தான் வளைகுடா நாடுகளுக்கு இவர்கள் பயணிக்கின்றனர். ஆனால் வளைகுடா நாடுகளின் மண்ணில் கால் வைத்தது முதலே கொத்தடிமைகளாக அடிப்படை மனித உரிமைகள் எதுவுமற்றவர்களாக சிறைவாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள் எதிர்பார்த்துப் போன ஊதியமும் சரியான உணவும் கொடுக்கப்படுவதும் இல்லை.

இலங்கை அரசு தலையீடு

இலங்கை அரசு தலையீடு

அத்துடன் வளைகுடா நாடுகளில் 2வது, 3-வது மனைவியாக கட்டாய திருமணம் செய்யப்படுகிற கொடுமையையும் எதிர்கொள்கின்றனர். இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கை அரசு தலையிட்டு இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டிய நிலை உருவானது.

வாழ்வாதாரத்துக்கு உதவி

வாழ்வாதாரத்துக்கு உதவி

இந்த விதவைகள் வாழ்வாதாரத்துக்கான பணிகளை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முன்னெடுத்து கொண்டிருக்கின்றன. இவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட இந்தியா பல்வேறு நலத்திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

English summary
According to the Srilanka Govt Reports that 89,000 Tamil war widows North and Eastern Provinces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X