9 ஆம் தேதி சென்டிமெண்ட்.. ஓடிப்போன கோத்தபாய ராஜபக்சே.. சிக்கியிருந்தால் சின்னாபின்னம்தான்
இலங்கையில் 9 ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வுகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள், ஜூன், ஜூலை மாதங்களில் 9ஆம் தேதி அரங்கேறியுள்ளது.
கொழும்பு: இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இலங்கையில் 9 ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வுகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள், ஜூன், ஜூலை மாதங்களில் 9ஆம் தேதி அரங்கேறியுள்ளது.
Recommended Video
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, ராணுவம், பொதுப்போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவுத்திருந்தது.
பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியினர், மாணவர் அமைப்பினர், தொழிற்சங்க அமைப்புகள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையடியதோடு தீ வைத்து எரித்தனர். இதனால் இலங்கையின் முக்கிய நகரங்கள் பற்றி எரிந்தன.

ராஜபக்சே ராஜினாமா
கடந்த மே மாதத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களைக் கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. இதனையடுத்து கடந்த மே 9ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி ஓடினார் மகிந்த ராஜபக்சே.

அடங்காத போராட்டம்
மகிந்த ராஜபக்சே பதவி விலகிய பின்னரும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் போராட்டங்கள் ஓயவில்லை. கோத்தபாய ராஜபக்சே பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என்று போராடி வருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச
கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மறுக்கவே போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையொட்டி இந்த ஊரடங்கு தடைகளையும் தாண்டி ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்தனர். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக என வலியுறுத்தி மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் மாளிகை முற்றுகை
அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் வகையில் காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பலர் காயமடைந்துள்ளனர். தடைகளைத் தாண்டி வந்த கூட்டத்தைக் கலைக்கப் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவும் படுகாயமடைந்தார்.

அதிபர் மாளிகை சூறையாடல்
கொழும்பில் உள்ள மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில், கோத்தபாய ராஜபக்சே மாளிகையை விட்டு தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள சொகுசு கார்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

கோத்தபாய தப்பி ஓட்டம்
இலங்கையில் போராட்டம் தீவிரமடையும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையொட்டி, கோத்தபாய ராஜபக்சே தப்பியிருப்பதாகவும், அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் அலைகடலென திரண்டு வந்த போராட்டக்காரர்களிடம் மட்டும் கோத்தபாய ராஜபக்சே சிக்கியிருந்தார் சின்னாபின்னமாகியிருப்பார் என்றே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9ஆம் நம்பர் சென்டிமெண்ட்
இலங்கையில் 9ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வுகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் 9ஆம் தேதியன்று மஹிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார் அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 9 ஆம் தேதி அன்று பசில் ராஜபக்சே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், அவர் இன்று ஜூலை 9ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications