Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருளில் சத்தமின்றி கிளம்பிய சீன உளவு கப்பல்.. அடுத்து எங்கே செல்கிறது தெரியுமா! பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவின் கடும் அதிருப்திக்கு இடையே, இலங்கை வந்திருந்த சீன உளவு கப்பல் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவே இலங்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் உதவிகள் தேவைப்படுகிறது.

இருப்பினும், இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா தவிர யாரும் தங்களுக்கு உதவவில்லை என அந்நாட்டின் அதிபர் விக்ரமசிங்கவே அறிவித்து இருந்தார். இந்தச் சூழலில் சீன உளவு கப்பலின் இலங்கை பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 சீன கப்பல்

சீன கப்பல்

இலங்கையில் இருக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது. இலங்கையும் யுவான் வாங் 5 கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. மேலும், கப்பலுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரே வாரத்தில் இவை அனைத்தும் மாறியது. சீன உளவு கப்பலுக்கு திடீரென அனுமதி அளிக்கப்பட்டது.

 சத்தமின்றி கிளம்பிய கப்பல்

சத்தமின்றி கிளம்பிய கப்பல்

அதன்படி கடந்த வாரம், அதாவது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8 மணியளவில், இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில், சுமார் ஆறு நாட்களுக்குப் பின்னர் சீன உளவு கப்பல் நேற்று மாலை நேரத்தில் கப்பல் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. அடுத்து அந்த கப்பல் நேரடியாகச் சீனாவில் உள்ள ஜியாங் யின் துறைமுகத்திற்குச் செல்கிறது.

ஆற்றல்

ஆற்றல்

சீனாவின் இந்த உளவு கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் இந்திய ஏவுகணை சோதனைகள் குறித்த தரவுகள் சீனாவுக்குச் செல்லும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாகவே இந்தியா அதிருப்தி தெரிவித்து இருந்தது. இருப்பினும், சரக்கு மற்றும் எரிபொருளை நிரப்பவே கப்பல் வருவதாகச் சீனா தெரிவித்து. அதேபோல இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் இருக்கும் போது, டிரெக்கிங் வசதிகளை ஆப் செய்து வைக்கவும் சீனா இலங்கையிடம் கேட்டுக் கொண்டது.

 பரபர பின்னணி

பரபர பின்னணி

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தச் சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தளங்கள் குறித்த தரவுகளைச் சீனா சேகரிக்கும் ஆபத்து உள்ளதாக இந்தியா அதிருப்தி தெரிவித்தது.

 அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா எச்சரிக்கை


இந்தக் கப்பலை அறிவியல் ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுவதாகச் சீனா கூறுகிறது, ஆனால் இந்தக் கப்பல் சீனாவின் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாலும் செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதாலும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே சீன மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதில் சீனா முதலீடு செய்துள்ளது. இதற்கான கடனை இலங்கை செலுத்தத் தவறியதை அடுத்து, 2017இல் இந்த துறைமுகம் சுமார் 99 ஆண்டுகளுக்குச் சீனாவின் கைகளில் குத்தகைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+