அப்போ கன்பார்மா? திடீரென வந்து இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்! ராஜபக்சே குடும்பத்தினர் எஸ்கேப்? -உண்மையா?
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன. இப்போது நமல் ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் செல்வதாக சொல்லப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.
Recommended Video
அதே சமயம் மகிந்த ராஜபக்சே ஹெலிகாப்டரில் ஏறுவது போன்ற புகைப்படம் ஒன்றும் பரவி வருகிறது. ஆனால் அது 2019ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஆகும்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.
இதையடுத்து நடந்த மிகப்பெரிய மோதலில், இலங்கையில் தென்பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

தப்பி ஓட்டம்?
இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன. தனி விமானம் மூலம் அவர் நாட்டை விட்டு தப்பித்து ஓடி விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல் அவர் எந்த நாட்டிற்கு தப்பித்து ஓட போகிறார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

நமல் ராஜபக்சே
இன்று கொழும்பில் இருந்து ரகசிய விமானம் ஒன்று வெளியேறிய சாட்டிலைட் புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. இந்த விமானத்தில் மஹிந்த இருப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. அதே சமயம் அது வெறும் கார்கோ விமானம்தான் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் மஹிந்தவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சேவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் இருந்து தொப்பித்து ஓடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

எங்கே செல்கிறார்
நமல் ராஜபக்சேவின் மனைவி,குழந்தைகள் இதில் தப்பித்து ஓடுவது போல காட்சிகள் உள்ளன. இவர்களின் வீட்டின் பின் பக்கம் இருக்கும் மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கிஉள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றன. அதில் ஏறி இவர்கள் தப்பித்து சென்றது போல காட்சிகள் உள்ளன. இவர்கள் திரிகோண மலையில் இருக்கும் கடற்படை தளபதி உல்லுகெந்தன்னா வீட்டில் தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானாலும் அந்த செய்திகள் உறுதிக்கப்படுத்தப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பே நமலின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வந்தன.

ஹெலிகாப்டர்
இதே கடற்படை தளபதி உல்லுகெந்தன்னா வீட்டில்தான் மஹிந்த ராஜபக்சேவின் மனைவியும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நமலின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் செல்வதாக சொல்லப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த வீடியோக்கள் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நமல் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். அதில், என் தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார்; நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை. எப்போதும் எங்கள் மக்களுடனே நிற்கிறோம் என்று மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் AFP செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications