• search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வழியாக நள்ளிரவில்.. இலங்கை திரும்பிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச! மாலை அணிவித்து வரவேற்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், கோத்தபய ராஜபக்ச தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இலங்கையின் பொருளாதார நிலைமையும் அப்படித்தான்.

சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார சிக்கல் அங்கு ஏற்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டிலேயே நிலைமை கையை மீறிச் செல்லும் என எதிர்பார்த்தனர்.

 இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பம்! இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பம்!

இலங்கை

இலங்கை

இருப்பினும், எப்படியோ அந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். உள்நாட்டுப் போர் செலவுகள், அதிக கடன், கெமிக்கல் உரங்கள் தடை என இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கம் முதலே இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றனர். எரிபொருள், மின்சாரத்திற்குக் கூட மிகக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

போராட்டம்

போராட்டம்

இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் இல்லாததால் தொழிற்துறையினரும் கூட மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அங்கு ஒரு கட்டத்தில் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே முழு வீச்சில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கினர்.

முற்றுகை

முற்றுகை

இதனால் முதலில் இலங்கை பிரதமராக இருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களுக்கு அஞ்சி பதவி விலகினார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அதிபரின் செயலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் நுழைவு வாயிலைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஜூலை 9இல் கட்டிடத்தின் உள்ளே புகுந்து அதனை ஆக்கிரமித்தனர். மக்கள் போராட்டங்கள் இப்படி கையை மீறிச் சென்றதால் அது அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது.

 தப்பியோடிய ராஜபக்ச

தப்பியோடிய ராஜபக்ச

மக்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி அப்போது இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச ரகசியமாக மாலத்தீவுக்குத் தப்பியோடினார். மேலும், அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அங்கிருந்தபடியே அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் கிளம்பிய நிலையில், அவர் தாய்லாந்துக்குச் சென்றார்.

 இலங்கைக்கு கிடைத்த உதவி

இலங்கைக்கு கிடைத்த உதவி

அவர் வெளிநாடுகளுக்குச் சென்ற சமயத்தில் இலங்கையிலும் பல மாற்றங்கள் நடந்தன. ரணில் விக்ரமசிங்க அதிபராகவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இலங்கை பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சர்வதேச நிதியத்துடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இப்போது இலங்கைக்கு உதவும் வதையில் சர்வதேச நிதியம் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

 நாடு திரும்பினார்

நாடு திரும்பினார்

இந்தச் சூழலில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று சுமார் ஏழு வாரங்களுக்குப் பிறகு, வெள்ளி நள்ளிரவில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். விமான நிலைய அதிகாரி ஒருவர் கோத்தபய ராஜபக்ச இலங்கைக்கு வந்துள்ளதைத் தெரிவித்தார். 73 வயதான கோத்தபய ராஜபக்சவுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மாலை அணிவித்து வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

முன்னதாக சிங்கப்பூரில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், 90 நாள் விசாவுடன் அவர் தாய்லாந்து சென்றார். இருப்பினும், அவரை தாயகம் அழைத்து வர வேண்டும் என அழுத்தம் அதிகரித்த நிலையில், அவரே இலங்கை திரும்பியுள்ளார். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் இலங்கை திரும்பியதாக ஏர்போர்ட் அதிகாரி கூறினார்.

English summary
Sri Lanka former president Gotabaya Rajapaksa returned to the country: Gotabaya Rajapaksa come back to Sri lanka after Seven weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X