Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் தொடரும் அடக்குமுறை.. போராட்டக்காரர்களை தாக்கி கூடாரங்களை அகற்றிய ராணுவம்.. பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்றும் வகையில் அவர்களின் கூடாரங்களை ராணுவத்தினர், போலீசார் அகற்றி அடக்குமுறையில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் நடத்தி சிலரை கைது செய்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதற்கு இலங்கையில் ஆட்சி செய்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

ராஜபக்சேக்கள் ராஜினாமா

ராஜபக்சேக்கள் ராஜினாமா

மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே மக்கள் இலங்கையில் ஆளும் ராஜபக்சே ஆட்சி மீது அதிருப்தி அடைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த துவங்கினர். இது போராட்டமாக வெடித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதற்கிடையே கடந்த 9ந்தேதி போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவிரை ராஜினாமா செய்வதாக கடந்த 14ம் தேதி கடிதம் வழங்கினார்.

அதிபரான ரணில் விக்ரமசிங்கே

அதிபரான ரணில் விக்ரமசிங்கே

இதையடுத்து நடந்த அதிபர் தேர்தலில் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜபக்சேக்களின் ஆதரவாளராக தான் ரணில் விக்ரமசிங்கே செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்கே புதிதாக அமைச்சர்களை நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனா தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கூடாரங்கள் அகற்றம்

கூடாரங்கள் அகற்றம்

இந்நிலையில் தான் நேற்று இரவு ராணுவத்தினர் கொழும்பு அதிபர் மாளிகை வளாகம் மற்றும் காலி முகத்திடல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். மேலும் அவர்கள் அமைத்திருந்த தடுப்புகள், கூடாரங்களை ராணுவத்தினர், போலீசார் அகற்றினர். இதனால் அங்கு ராணுவத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தாக்குதல்-கைது

தாக்குதல்-கைது

மேலும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு சிலர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. மேலும் ராணுவம், போலீசார் மூலம் அடக்குமுறை மேற்கொள்ளப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

கைவிடமாட்டோம்

கைவிடமாட்டோம்

இதுபற்றி போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், ‛‛அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவும் கூட மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார். இதனால் அவர் ராணுவம் மூலம் இத்தகைய செயலில் ஈடுபடுகிறார். இது கண்டிக்கத்தக்கது. இருப்பினும் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்'' எனக்கூறியுள்ளார்.

Recommended Video

    Srilanka-வின் புதிய அதிபர்... யார் இந்த Ranil Wickremesinghe? *Srilanka
    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று அவரது தலைமையில் அமைச்சரவை பொறுப்பு ஏற்கலாம் என கூறப்படுகிறது. அதோடு தினேஷ் குணவர்தனாவை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் போராட்டம் வெடிக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் இச்செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+