நாசக்கார முயற்சிகளை புறம்தள்ளுங்க! ஒன்றிணையலாம் வாங்க! இலங்கை மக்களுக்கு கோத்தபய வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ‛‛ இனம், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நாசக்கார சக்திகளின் முயற்சிகளை புறம்தள்ளிவிட்டு பொருளாதாரம், அரசியல் சவால்களில் வெற்ற பெற அனைத்து இலங்கை மக்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது'' என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கஅவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா

மகிந்த ராஜபக்சே ராஜினாமா

பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே இன்னும் பதவி விலகாத நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். தற்போது அவர் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார்.

வீடுகள் எரிப்பு

வீடுகள் எரிப்பு

இதற்கிடையே பொதுமக்களின் அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ராஜபக்சேக்களின் வீடுகள், அரசியல் ஆதரவாளர்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தபய வேண்டுகோள்

கோத்தபய வேண்டுகோள்

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமக்களுக்கு டுவிட்டர் மூலம் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ‛‛பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் சவால்களில் வெற்ற பெற அனைத்து இலங்கை மக்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இனம், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நாசக்கார சக்திகளின் முயற்சிகளை புறம்தள்ள வேண்டும். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் தற்போது அவசியமானதாகும்'' என கூறியுள்ளார்.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !
    நேற்று இரவு கூறியது என்ன?

    நேற்று இரவு கூறியது என்ன?

    முன்னதாக நேற்று இரவு ‛‛பொதுமக்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வன்முறை, பழிவாங்கும் செயல்களை நிறுத்த வேண்டும்.அமைதி காக்க வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஒருமித்த கருத்து மூலம் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+