பயங்கரவாத அச்சுறுத்தல்! இலங்கை பக்கமே போகாதீங்க.. அமெரிக்கா திடீர் எச்சரிக்கை.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது மக்களுக்கு புதிய அட்வைஸ் வழங்கி உள்ளது. அதாவது எரிபொருள், மருந்து பற்றாக்குறை இலங்கையில் நிலவும் நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் உள்ளது. இதனால் இலங்கை பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு கொடுத்த ஆதரவை பிற கட்சியினர் விலக்கி கொண்டனர். அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கிடையே இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 அமெரிக்க ‛அட்வைஸ்’

அமெரிக்க ‛அட்வைஸ்’

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்தால் அங்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு:

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் பிரச்சனை உள்ளது. மளிகை, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு, கண்ணீர் புகை குண்டும் வீசி கலைத்துள்ளனர். நாடு முழுவதும் தினசரி அதிகநேரம் மின்தடை உள்ளது. பொதுபோக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உள்ளூர் ஊடகங்களை கவனிக்க வேண்டும். புதிதாக இலங்கை பயணம் செய்ய திட்டமிடுவோர் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பயங்கரவாத தாக்குதல்

பயங்கரவாத தாக்குதல்

மேலும் பயங்கரவாத அச்சுறுத்தலால் அங்குள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகள் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு, விமான நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து சிறிய அல்லது எச்சரிக்கையின்றி தாக்குதல் நடத்தலாம்'' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மக்கள் போராட்டத்தால் நடுங்கி போன ராஜபக்சே குடும்பம்! இலங்கையில் என்ன நடந்தது?
     கொரோனா எச்சரிக்கை

    கொரோனா எச்சரிக்கை

    மேலும், கொரோனா தொடர்பாக இலங்கைக்கான லெவல் -3 பயண கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 'லெவல்-3' என்பது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை குறிக்கும். இந்த அறிவுரைப்படி ‛‛அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அங்கீகரித்த தடுப்பூசியை நீங்கள் முழுமையாக செலுத்தி இருந்தால் கொரோனா தொற்று பாதிப்பும், பாதிக்கப்படும் தன்மையும் குறைவாக இருக்கும். இதனால் சர்வதேச பயணத்துக்கு முன் தடுப்பூசி செலுத்த வேண்டும்'' என கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+