இலங்கையில் அதிபர் கோத்தபய எஸ்கேப்.. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் , புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இருந்தும், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்களும், போராட்டக்காரர்களும் குவிந்தனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுயிட்டனர்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே, தப்பியோடியுள்ளார். நேற்று இரவே ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்த நிலையில், இன்று கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகம் ஆகியவை மக்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளன.
இந்த சூழலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மக்களை கட்டுப்படுத்துவது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications