அன்புமணின்னா டீசன்ட்னு நினைச்சீங்களா.. வேட்டிய மடிச்சு கட்டுனா தெரியும்.. ஆவேசம்! கையில் புது ஆயுதம்
பாமக பொதுக்கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டி எச்சரிக்கை விடுத்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடலூர் : "புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபயர்டா.." என்கிற ரேஞ்சுக்கு வேட்டியை மடித்துக் கட்டி ஆவேசமாகப் பேசி இருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் "அன்புமணின்னா டீசண்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும் நான் யார்னு" என ஆவேசமாக சீறியபடி முன்னால் வந்து பேசினார் அன்புமணி ராமாதஸ்.
என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி என்.எல்.சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பாமக பொதுக்கூட்டம்
நீர், நிலம், விவசாயம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 31) மாலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கம், என்.எல்.சி மூன்றாவது சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம், பெரியப்பட்டு சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தை பாழாக்கும் திட்டங்களை முறியடிப்போம் என அன்புமணி பேசினார்.

அன்புமணின்னா டீசன்ட்னு நினைக்கிறான்
இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆவேச பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கூட்டத்தில் அவர் பேசும்போது, "அன்புமணின்னா டீசண்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும் நான் யார்னு'' என அவர் பேசிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

எப்பய்யா கோவம் வரும்?
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கே கோபம் வருகிறது. அய்யய்யோ மண்ணை எடுக்கிறார்களே.. விவசாயத்தை அழிக்கிறார்களே என எனக்கு கோபம் வருகிறது. உங்களுக்கெல்லாம் எப்பய்யா கோபம் வரும்? இந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு எப்பய்யா கோவம் வரப்போகுது? எவனோ வட நாட்டிலிருந்து வந்து இங்கு உங்களை அழித்துக் கொண்டிருக்கிறான். மண்ணைச் சுரண்டி, விவசாயத்தை அழித்து, தண்ணீரை உறிஞ்சி, பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

வேட்டியை மடிச்சுக் கட்டினா தெரியும்
எனக்கென்ன.. எங்கேயோ நடக்கிறது என எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த மாவட்டமும் அழிந்துவிடும். நீங்க வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.. இந்த அன்புமணி ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்கவிட மாட்டான். அன்புமணின்னா டீசண்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். நான் வேட்டியை மடிச்சுக் கட்டுனா தெரியும் நான் யார்னு. சும்மா அன்புமணின்னா டீசண்ட்னு நினைச்சிக்கிட்டு இருக்கான். ஏன்னா இது என் மண்ணு.. என் மக்கள் விவசாய பிரச்சினை.. வாழ்வாதார பிரச்சனை.. அதுக்கு ஒரு பிரச்சினைனா சும்மா விட மாட்டேன்'' என ஆவேசமாகப் பேசினார் அன்புமணி.

அன்புமணி கையில் ஆயுதம்
அப்படியே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மைக்கை விட்டு 2 ஸ்டெப் முன்பாக வந்து கூட்டத்தை நோக்கி கெத்தாகப் பார்த்தார் அன்புமணி ராமதாஸ். உடனே பாமக தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்ய, மேடையில் பின்னால் இருந்து மம்பட்டி ஒன்றை அன்புமணியின் கையில் கொடுத்தனர் நிர்வாகிகள். அதை உயர்த்திக் காட்டினார் அன்புமணி. மம்பட்டிதான் எங்கள் ஆயுதம் எனத் தெரிவித்தார் அன்புமணி.

கத்தி வேண்டாம்
மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸுக்கு வீரவாள் பரிசாக அளித்தனர். அதன் பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், "இனிமேல் கத்தியெல்லாம் கொடுக்காதீங்க.. அடுத்தமுறை மண்வெட்டிய கையில் கொடுங்க" என நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications