“நாயி.. பேயி.. சாராய வியாபாரி” என கொதித்த அண்ணாமலை.. புதிய வீழ்ச்சி.. பாயும் செந்தில்குமார் எம்பி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக கூறி பாஜக சார்பில் இன்று கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றிருந்தார்.

அப்போது பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர். அவர்களை குரங்கு என விமர்சித்த அண்ணாமலை, அமைச்சரையும் கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. திமுக எம்பி செந்தில் குமார் தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பரிந்துரைகள்

பரிந்துரைகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில், 112 பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிப்பதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்பு மேலெழுந்தது. தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், "மூர்கத்தனமான முடிவை எடுத்து இந்தியை கட்டாயமாக்கி இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து கடந்த 15ம் தேதி போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டம் திமுகவின் கபட நாடகம் என பாஜக விமர்சித்தது. மட்டுமல்லாது இதனை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அறிவித்தது.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

அதன்படி இன்று கடலூரில் பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்தார். இந்தி எதிர்ப்பு குறித்து பெரியார் கூறியவற்றை அண்ணாமலை மேற்கோள்காட்டி பேசினார். அதில், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தி மொழி எதிர்ப்புக்கான போராட்டம் என்பது இந்தி கூடாது என்பதற்காக அல்ல, ஆங்கிலத்தை வளர்க்கவே" என்று கூறினார். மேலும் இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

அமைச்சரை திட்டிய அண்ணாமலை

அமைச்சரை திட்டிய அண்ணாமலை

பின்னர் மேடையிலிருந்து இறங்கி வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். அப்போது ஆவேசப்பட்ட அண்ணாமலை, "மரத்து மேல குரங்கு தாவுறதபோல எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க? நான் சாப்பிட செல்வதற்கு முன்னர் நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்கள் என்று கூறியிருந்தேன். ஊருல நாயி.. பேயி.. சாராயம் விக்கிறவங்க எல்லாம் கேப்பாங்க.. நா பதில் சொல்லனுமா?" என்று கூறிவிட்டு பத்திரிகையாளர் மத்தியிலிருந்து அண்ணாமலை வெளியேறினார்.

கண்டனம்

கண்டனம்

இந்த வீடியோ வைரலானதையடுத்து பல்வேறு தரப்பினரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இது குறித்து விமர்சித்துள்ள திமுக எம்பி செந்தில்குமார், "பத்திரிகையாளர்களையும், அமைச்சரையும் தரக்குறைவான வார்த்தைகளால் அண்ணாமலை பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. கருத்தியல் வேறுபாடுகள் கொண்ட அரசியல் விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தரம் தாழ்ந்து மூன்றாம் நிலை ஆனால் தரம் தாழ்ந்து மூன்றாம் நிலை விமர்சனங்கள் அல்ல." என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+