தமிழகத்துக்கு 2024ல் சட்டசபை தேர்தல்.. மீண்டும் முதல்வராகும் ஈபிஸ்.. அடித்து கூறிய தமிழ் மகன் உசேன்
கடலூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக வருவார் என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தது. ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்
இதையடுத்து நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீது மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கு மத்தியில் ஓ பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழ் மகன் உசேன் தொழுகை
இந்நிலையில் தான் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டி அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடலுார் பச்சையாங்குப்பம் போலோஷா தைக்கால் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தினார். பின்னர் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அதன்பிறகு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை
மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் சமயத்தில் சட்டசபை தேர்தலும் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வந்தால் மீண்டும் சட்டசபை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருப்பார்.

விரைவில் முதல்வராகும் ஈபிஎஸ்
இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவது இல்லை என்பது போல் இறைவனிடம் கையேந்த வந்திருக்கிறோம். நிச்சயமாக அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வருவார் என்ற நம்பிக்கையில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளோம். '' என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications