கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 கிமீ தூரத்துக்கு சண்டை.. கத்தி பேசிய கண்டக்டர் உயிர் பரிதாபமாக பிரிந்தது.. ஓடும் பஸ்ஸில் பரபரப்பு

போலீசுடன் வாக்குவாதம் செய்த கண்டக்டர் திடீரென மரணமடைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிக்கெட் எடுக்காத போலீஸ் தகராறில் உயிரிழந்த கண்டக்டர்

    விருதாச்சலம்: அரசு பஸ் கண்டக்டருக்கும், போலீஸ்காரருக்கும் டிக்கெட் எடுப்பதில் தகராறு வந்துவிட்டது.. மூச்சை பிடித்து கொண்டு 10 கி.மீ. தூரத்துக்கு சண்டை போட்டு கொண்டிருந்த கண்டக்டர், ஓடும் பஸ்ஸிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இந்த சம்பவம் விருதாச்சலத்தில் மிகுந்த பரபரப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சியிலிருந்து கடலூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதில் போலீஸ்காரர் ஒருவர் மஃப்டியில் ஏறியுள்ளார். திட்டக்குடி ஸ்டேஷனில் வேலை பார்த்த அவர் பெயர் பழனிவேல்.

    Gov bus conductor died while arguing with the policeman near Cuddalore

    ஆனால் அவர் போலீஸ்காரர் என்பது தெரியாத கண்டக்டர் கோபிநாத், அவரிடம் சென்று டிக்கெட் எடுங்க என்று சொல்லி உள்ளார். அதற்கு பழனிவேல், நான் போலீஸ், டிக்கெட் எடுக்க தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.

    உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!

    அதற்கு கண்டக்டர், போலீஸுன்னா, ஐடி (அடையாள அட்டை) காட்டுங்க என்று கேட்டதற்கு, பழனிவேல் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதில்தான் சண்டை ஆரம்பமாகி உள்ளது. பஸ்ஸில் இருந்த பயணிகளும் "ஐடி-கார்டு எடுத்து ஒருமுறை காட்டி விடுங்களேன், பிரச்சனை முடியட்டும்' என்று சொன்னார்கள். ஆனாலும் பழனிவேல் கேட்காமல், கண்டக்டருடன் விவாதம் செய்து கொண்டே வந்தார்.

    கண்டக்டரும் இதை விடவில்லை.. சுமார் 10 கி.மீ தூரத்துக்கு இப்படியே காரசாரமாக சண்டை போட்டு கொண்டு வந்தனர். ஒருகட்டத்தில் கண்டக்டர் கோபிநாத் திடீரென பஸ்ஸுக்குள்ளேயே மயங்கி விழுந்தார். இதனால் பயணிகள் பதறிவிட்டனர்.

    உடனடியாக நெய்வேலியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அந்த பஸ்ஸிலேயே கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே பஸ்ஸில் இருந்த பயணிகள் பழனிவேலை சிறைபிடித்து வைத்திருந்தனர். தகவலறிந்த போலீசார், பழனிவேலை மீட்டு ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளனர்.

    English summary
    Government Bus Conductor died while arguing with Policeman near Virudhachalam in Cuddalore District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X