அய்யோ கேப்டன் இல்லாம.. கடலூர் பிரசாரத்தில் திடீரென தலையிலடித்து கதறி கதறி அழுத பிரேமலதா!
கடலூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கணவர் விஜயகாந்த் மறைவை சுட்டிக்காட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலையில் அடித்துக் கொண்டே கண்ணீர் விட்டு கதறி அழுதது அக்கட்சியினரை உருக வைத்தது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது தேமுதிக. மொத்தம் 5 லோக்சபா தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தீவிரமாக ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடலூரில் நேற்று பிரசாரம் செய்த பிரேமலதா கண்ணீரும் கம்பலையுமாக பேசியது தேமுதிகவினரை உருக வைத்தது.
கடலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: எங்க கல்யாணம், கேப்டன் விஜயகாந்துடன் நான் திருமணம் செய்து முதலில் வந்த ஊர் பண்ருட்டிதான். ஆனால் என் துரதிருஷ்டம், நான் இன்னைக்கு கேப்டன் இல்லாமல் வந்திருக்கிறேனே.. கேப்டன் கூடயே... என்னைக்கும் வந்த நானு இன்னைக்கு கேப்டன் இல்லாம முதல் முறையாக உங்க கிட்ட வந்துருக்கேனே.. ஏன் கடவுள் இப்படி செஞ்சாரோ? யாருக்கும் எந்த தண்டனையும் நாங்க கொடுக்கலையே.. தெரியலையே எனக்கு..
கேப்டன் கூடவேதான் நான் வருவேன். எல்லா இடத்துக்கும் கேப்டன் கூடவேதான் வருவேன்.. நான் இப்ப தலைவர் இல்லாம உங்களை பார்க்க வந்திருக்கேனே.. எனக்கு ரொம்ப மனசு வலிக்குதே... என் அன்பு தொண்டர்களே! இந்த புகழ் எல்லாம் நம்ம கேப்டனுக்குதான். நம்ம தலைவருக்குதான்.. அவர் சம்பாதித்ததுதான் நீங்க எல்லாருமே.. உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்... நான் எவ்வளவோ மனசுக்குள் துக்கத்தை கட்டுப்படுத்தினாலும் என்னால முடியலையே..
நான் கேப்டன் கூட இங்க வந்த நாட்கள்தான் என் மைண்ட்ல வருது.. தலைவர் இல்லாமல் இன்னைக்கு நான் உங்களைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கே. தலைவர் நம்ம கூட இல்லையேனு யாரும் நினைக்காதீங்க.. தலைவர் அங்கே (வானத்தை பார்த்து) நம்ம கூட தெய்வமா அங்க இருக்கிறார்.. தலைவர் நம்ம கூடத்தான் இருக்கார்.. எங்கேயும் போகலை.. உங்க எல்லாருக்கும் தலைவர் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த கண்ணீரும் கம்பலையுமான பேச்சால் தேமுதிகவினர் உருக்கமாகிப் போகினர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications