கூகுள் பே பண்ணிட்டேன்.. எனக்கு வரலயே.. பெட்ரோல் பங்கில்.. மாற்றுத்திறனாளி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை
கடலூர்: போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட மாற்றுத்திறனாளி ஊழியர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் பே மூலம் பணம் போட்டதாக கூறி ஏமாற்ற முயன்ற இளைஞர்களை, மாற்றுத்திறனாளி தட்டிக்கேட்ட போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்திருக்கும் அந்த ஊழியர், கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் பே பணப்பரிமாற்றம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு 8 மணியளவில் ஒரு இளைஞர் பைக்கில் பெட்ரோல் போட வந்திருக்கிறார். 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிய அவர், கூகுள் பே மூலமாக பணம் அனுப்புவதாக கூறியிருக்கிறார். பின்னர் அங்குள்ள கூகுள் பே ஸ்கேனில் செல்போனை வைத்த அவர், சிறிது நேரத்தில் பணம் அனுப்பிவிட்டேன் எனத் கூறியுள்ளார்.

"பணம் வரவில்லை"
அப்போது அவருக்கு பெட்ரோல் போட்ட கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஊழியர், செல்போனை செக் செய்துவிட்டு அக்கவுன்ட்டில் பணம் ஏறவில்லையே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞரோ, "அதுபற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. நான் அனுப்பிவிட்டேன்" எனக் கூறி அங்கிருந்து செல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அந்த ஊழியர், "கூகுள் பேவில் நீங்கள் பணம் அனுப்பியதை காட்டுங்கள்" எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலைவெறி தாக்குதல்
பின்னர், அந்த ஊழியரை தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தனது நண்பர்கள் 2 பேருடன் நள்ளிரவில் அந்த பெட்ரோல் பங்குக்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஊழியரை அவர்கள் உருட்டுக்கட்டை, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.

கைது நடவடிக்கை
இதையடுத்து, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வந்து, அந்த மாற்றுத்திறனாளி ஊழியரை அந்த இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் அவரை மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் அலி (24), அப்துல் ஹமீது (22) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications