Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயர் ஜாதி வகுப்பு ஏழைகளுக்கு கல்வி-வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு: வழக்கு கடந்து வந்த பாதை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயர் ஜாதி வகுப்பு ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக காணலாம்.

கடந்த 2019- ஆம் ஆண்டு உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

செல்லும் என தீர்ப்பு

செல்லும் என தீர்ப்பு

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், உயர் ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும் செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்ததனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.

மக்களவை ஒப்புதல்

மக்களவை ஒப்புதல்

* ஜன. 8, 2019- அரசியல் அமைப்பில் 103 வது திருத்த மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

* ஜன. 9, 2019 - மாநிலங்களவையிலும் 103வது அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேறியது.
பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ஒப்புதல்

ஜனாதிபதி ஒப்புதல்

* ஜனவரி 12, 2019: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதவிற்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த மசோதா சட்டமானது.

* பிப்ரவரி மாத துவக்கத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால தடை

இடைக்கால தடை

* அடுத்த சில தினங்களில் அதாவது பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்தது.

* பிப்ரவரி 8 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

5 நீதிபதிகள் அமர்வு

5 நீதிபதிகள் அமர்வு

* அதன்பிறகு நடப்பு ஆண்டு (2022) ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் யுயு லலித், தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

* செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கில் விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடங்கியது

* செப்டம்பர் 27 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்தையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது உறுதி

10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது உறுதி

* நவம்பர் 7 ஆம் தேதி (இன்று) வழக்கில் அரசியல் அமைப்பில் 103-வது திருத்தத்தில் கொண்டு வந்த திருத்தம் செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் அட்மிஷன்கள் போன்றவற்றில் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+