டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகளில் 2.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு- மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 3,03,90,687 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் வீதம் தற்போது 97.36 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,977 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

2.88 Crore balance Covid19 Vaccine doses still available with States

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 42,015 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 4,07,170 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 1.30 சதவீதம் பேர்.

வாராந்திர பாதிப்பு வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது, தற்போது 2.09 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம் 2.27 சதவீதம், தொடர்ந்து 30 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கொரோனா பரிசோதனை திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 44.91 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாட்டில் இதுவரை 43.25 கோடிக்கும் அதிகமான (43,25,17,330) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 53,38,210 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 40,36,44,231 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2.88 கோடி (2,88,73,099) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

English summary
According to the Govt Reports 2,88,73,099 balance and unutilized COVID Vaccine doses are still available with the States/UTs and private hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X