டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் அதிகரிக்கும் கேங் வார் - மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

ரவுடிக்கும்பல்கள் மோதிக்கொள்வதையும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதையும் சினிமாவில் பார்த்த டெல்லிவாசிகள் நேற்று நேரிலேயே பார்த்தனர். துவார்கா மோர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு ரவுடிக்கும்பல் துப்ப

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி-வீடியோ

    டெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லியில் ரவுடிக்கும்பல் மோதிக்கொள்வது அதிகரித்து வருகிறது. பரபரப்பான சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரவீண், விகாஸ் என்ற இரண்டு ரவுடிக்கும்பல் மோதிக்கொண்டதில் இருவருமே உயிரிழந்தனர்.

    பிரவீன் கெலோட் என்பவன் ஒரு ரவுடிக்கும்பலை சேர்ந்தவன். அதே போல விகாஸ் தலால் என்பவன் மற்றொரு ரவுடிகும்பலைச் சேர்ந்தவன், இருவரும் கொலை, கொள்ளை, வழிப்பறிகளை செய்து வருபவர்கள். இருவர் மீதும் டெல்லி, ஹரியானா காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.

    விகாஸ் தலால் கடந்த ஆண்டு ஹரியானா சிறையில் இருந்து தப்பி வந்து டெல்லியில் பதுங்கியிருந்தான். இந்த இரு கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ள வேண்டும் என்ற வன்மம் வைத்துக்கொண்டு இருந்தனர். பிரவீணை தூக்க ஸ்கெட்ச் போட்டது விகாஸ் கும்பல். அதற்கான நாளும் நேரமும் குறிக்கப்பட்டது.

    ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி? ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி?

    ராகு காலத்தில் ஸ்கெட்ச்

    ராகு காலத்தில் ஸ்கெட்ச்

    ஞாயிறுக்கிழமையான நேற்று மாலை ராகு காலத்தில் நேரம் குறிக்கப்பட்டது. பிரவீண் தனது மாருதி காரில் எப்போது பரபரப்பாக இருக்கும் துவாரகா மோர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தான். நேற்று மாலையில் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    துப்பாக்கிச்சூடு

    துப்பாக்கிச்சூடு

    அந்த நேரத்தில் பிரவீண் காரை மறித்தபடி ஒரு டிசையர் கார் வந்து நின்றது. அதில் இருந்த கும்பல் பிரவீணை நோக்கி சராமாரியாக சுட்டது. முதலில் இது சினிமா சூட்டிங் ஆக இருக்கலாம் என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் ரவுடி கும்பலுக்கு இடையே நடக்கும் கேங் வார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. விகாஸ் கும்பலும் எதிர் தரப்பினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் அங்கும் இங்கும் பதற்றத்துடன் ஓட ஆடம்பித்தனர்.

    பலியான பிரவீண்

    பலியான பிரவீண்

    விகாஸ் கும்பல் சுட்டதில் பிரவீண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானான். பின் இருக்கையில் பிரவீணின் நண்பர் படுகாயமடைந்தார். ஆபரேசன் சக்சஸ் என்று விகாஸ் கும்பல் நினைத்த நேரத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருந்த காவல்துறையினர் ரவுடிகும்பல் மீது தாக்குதல் நடத்தினர்.

    சொத்துத்தகராறு

    சொத்துத்தகராறு

    ரவுடிக்கும்பலை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டனர். காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் விகாஸ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சொத்துப்பிரச்சினையில் இரு ரவுடிக்கும்பலுக்கு இடையே சண்டை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    கேங் வார் அதிகரிப்பு

    கேங் வார் அதிகரிப்பு

    துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடிக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தேடும்பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரவுடிகள் நடத்திய கேங் வார் குறித்து பிந்தாபூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 முறை ரவுடிக்கும்பலிடையே மோதல் நடந்துள்ளது.

    English summary
    Two suspected criminals were killed near the Dwarka Mor metro station in South West Delhi.following a shootout between rival gangs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X