அடேங்கப்பா சாதனை! அதிக வரி செலுத்தி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் முதலிடம்! எவ்வளவு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் அதிக வரி செலுத்திய நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்திய வரி உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் தங்களின் வருமானத்துக்கு ஏற்ப ஆண்டுதோறும் வரி செலுத்தி வருகின்றனர். சிறு நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அதிகளவில் வரிகள் செலுத்துவது தான் மத்திய, மாநில அரசுகளின் வருவாயாக உள்ளன.
இதனால் தான் பெரும் நிறுவனங்களை தொழில் செய்ய ஒவ்வொரு மாநில அரசுகளும் அழைத்து வருகின்றன. இந்நிலையில் தான் 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்திய நிறுவனங்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ரிலையன்ஸ் முதலிடம்
இந்தியாவில் 2021-2022ம் நிதியாண்டின் அடிப்படையில் அதிக வரி செலுத்திய நிறுவனங்களில் ரிலையன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1,88,012 கோடி வரியாக செலுத்தப்பட்டுள்ளது. இது 2020-21ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ரூ.1,35,468யை விட 39 சதவீதம் அதிகமாகும். அதற்கு முன்பு 2019-20 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1,15,461 கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ.1,16,251 கோடியும் வரியாக செலுத்தி இருந்தது.

ரொம்ப பெருமையாக இருக்கு
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்துக்கு பிறகு இந்த தகவல் வெளியானது. இந்த கூட்டத்துக்கு பிறகு ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்தியாவில் டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் இருப்பது பெருமையாக உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படும் 5ஜி சேவை, 4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் இருக்கும்'' என கூறப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்
ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து அதிக வரி செலுத்திய நிறுவனங்களின் பட்டியலில் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் 2021-22 நிதியாண்டில் ரூ.1,44,085 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், டாடா கன்சல்டன்சி ஆகியவை இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா நிறுவனம்
இந்த காலக்கட்டத்தில் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனம் வெளிப்படைத்தன்மையை பேணுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் 2021-22ல் ரூ.54,165 கோடி வரியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முந்தைய நிதியாண்டான 2020-21ல் ரூ.34,562 கோடி ரூபாய் வரி செலுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications