பெண்களுக்கு சமஊதியம் - கூடுதல் பணிக்கு இரட்டை சம்பளம்.. அமலான 4 தொழிலாளர் சட்டம் பற்றி மோடி பெருமை
டெல்லி: நம் நாட்டில் நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து சீர்த்திருத்தம் செய்து புதிய 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஊதியம் வழங்குவது, கூடுதல் பணிக்கு இரட்டை சம்பளம் வழங்குவது உள்பட பல்வேறு பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்க உள்ளது. இந்நிலையில் தான் இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி பிரதமர் மோடி பெருமையாக போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவை தான் அந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்டங்களாக மாற்றி கொண்டு வரப்பட்டுள்து. தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை மேம்படுத்தி தொழிலாளர்களை பாதுகாப்பது, பணியிட சூழலில் அவர்களுக்கு சீரமைப்பை கொண்டு வருவது, பணிப்பாதுகாப்பை கொண்டு வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி தொழிலாளர்களுக்கு பணி நியமனம் கடிதம் வழங்குவது, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்குவது, தொழிலாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐசி வழங்குவது உள்ளிட்டவற்றை இந்த சட்டங்கள் உறுதி செய்ய உள்ளனர். இது தொடர்பாக, பிரதமர் மோடி பெருமைப்படி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ஷ்ரமேவ் ஜெயதே, இன்று நம் அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் நன் சார்ந்த சீர்த்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரியளவில் அதிகாரம் அளிக்கிறது. இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்.
இந்த சட்டம் என்பது தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதல், பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்குவது மட்டுமின்றி பெண்கள் மற்றும் இளைஞர்களின் சக்திகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்க வாய்ப்பு வழங்குகிறது.
இது தொழிலாளர்களின் உரிமைகளை பகாதுகாப்பதோடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்துக்கு தயாரான சூழலைஉருவாக்கும். இந்த சீர்த்திருத்தங்கள் என்பது வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்'' என கூறியுள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications