இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்தது... ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை குறைகிறது!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டம் காட்டி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
நாட்டில் ஒரு கட்டத்தில் 4,00,000-க்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு இப்போது 50,000-க்குள் அடங்கி விட்டது. கொரோனா தடுப்பூசி, பல்வேறு மாநிலங்களில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

46,617 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . இந்தியாவில் வைரஸின் மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 59,384 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 2,95,48,302 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள் குறைவு
கொரோனா வைரஸ் காரணமாக 853 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்து சென்று விட்டது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,00,312 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 5,09,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்களில் உள்ளவர்கள் 1.67% ஆகும்.

குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு
அதே வேளையில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.01% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர பாஸிடிவ் கேஸ்கள் விகிதம் 2.57% ஆக உள்ளது .தினசரி பாஸிட்டிவ் விகிதம் 2.48% ஆக இருக்கிறது. இதிலும் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக 5% க்கும் குறைவாகவே பாஸிட்டிவ் விகிதம் உள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கேரளாவில் அதிக பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 34,00,76,232 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் தீவிரமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஏறக்குறைய கொரோனா குறைந்து விட்டாலும், கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications