டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகளை சரியாக கணித்து எக்சிட் போல் வெளியிட்டது இந்த ஒரு டிவி சேனல்தாங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளும் 5 மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக வந்துள்ளனவா என்ற கேள்வி மக்களிடையே எழுவது சகஜம்.

பல்வேறு டிவி சேனல்களும், கருத்துக் கணிப்பு அமைப்புகளுடன் இணைந்து, கருத்துக் கணிப்பை வெளியிட்டன. அதில், இந்தியா டுடே, ஆக்சிஸ் இணைந்து வெளியிட்ட எக்சிட் போல்கள், ஏறத்தாழ சரியான முடிவை கொடுத்துள்ளன.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே எக்சிட் போல் கூறியது. சட்டீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 46 தொகுதிகள். கருத்து கணிப்பின்படி சட்டீஸ்கரில் 55-65 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். பாஜக 21-31 தொகுதிகளை வெல்லும். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 4-8 தொகுதிகளை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரிபப்ளிக் ஜன் கீ பாத் உல்டா

ரிபப்ளிக் ஜன் கீ பாத் உல்டா

தேர்தல் முன்னணி நிலவரத்தை வைத்து பார்த்தால், காங்கிரஸ் 68 தொகுதிகளையும், பாஜக 17, தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாக சீட்டுகளை பெற்றுள்ளபோதிலும், டிரெண்ட் என்பது சரியாக கணிக்கப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால், ரிபப்ளிக், ஜன் கீ பாத் எக்சிட் போல் சட்டீஸ்கரில் மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்றும் அக்கட்சி 40 முதல் 48 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சியோ 37 முதல் 43 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தது. அப்படியே உல்டாவாக நடந்துள்ளது.

எக்சிட் போல் நச்

எக்சிட் போல் நச்

தெலுங்கானா தேர்தல் முடிவுகளையும், இந்தியா டுடே சரியாக கணித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 79-91 தொகுதிகளை வெல்லும் என்று அது கணித்தது. அக்கட்சி 86 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்தியா டுடே அதை சரியாக கணித்திருந்தது. எக்சிட் போல் முடிவில் 21-33 தொகுதிகள் வரை காங். கூட்டணி வெல்லும் என அது கணித்திருந்தது. ரிபப்ளிக்-சி ஓட்டரோ, காங். கூட்டணி 47-59 தொகுதிகளை வெல்லும் என மாறுபட்ட ரிசல்ட்டை கொடுத்திருந்தது நினைவிருக்கலாம். பிற எந்த டிவி சேனலுமே, இந்தியா டுடே போல சரியாக இதை கணிக்கவில்லை.

மிசோராமில் இந்தியாடுடே போல் பலித்தது

மிசோராமில் இந்தியாடுடே போல் பலித்தது

மிசோராமை பொறுத்தளவில், இந்தியா டுடே-ஆக்சிஸ் எக்சிட் போல், காங்கிரஸ் கூட்டணி 8-12 தொகுதிகளையும், மிசோ தேசிய கூட்டணி 16-20 தொகுதிகளையும், பிறர் 8-12 தொகுதிகளையும் வெல்லக்கூடும் என கூறியது. டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் நடத்திய, எக்சிட் போல் முடிவுகளில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளை வெல்லும். மிசோ தேசிய கூட்டணி 18 தொகுதிகளை வெல்லும். பிறர் 6 தொகுதிகளை வெல்வார்கள். பாஜக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்று கணிக்கப்பட்டது. ரிபப்ளிக் டிவி-சிஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 14-18 தொகுதிகளை வெல்லும். மிசோ தேசிய கூட்டணி 16-20 தொகுதிகளை வெல்லும். பிறர் 3-10 தொகுதிகளை வெல்ல கூடும். பாஜகவிற்கு ஒரு இடமும் கிடையாது என்று கணித்தன. டிரெண்ட் படி மிசோ தேசிய கூட்டணி 26 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்தன.

தவறிய இந்தியா டுடே

தவறிய இந்தியா டுடே

ராஜஸ்தானை பொறுத்தளவில், இந்தியா டுடே கருத்துக் கணிப்பு டிரெண்ட்டை கணிக்க தவறியது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சி 119-141 தொகுதிகள் வரை வெற்றி பெறும். பாஜகவுக்கு 55-72 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்சிட் போல் முடிவுகள். ஆனால் தேர்தல் டிரெண்ட், காங்கிரசுக்கு 101 தொகுதிகளும், பாஜகவிற்கு 72 தொகுதிகளும் முன்னிலை என்று சொல்கின்றது.

ராஜஸ்தானில் டைம்ஸ் நவ்

ராஜஸ்தானில் டைம்ஸ் நவ்

ரிபப்ளிக் சி வோட்டர் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள்படி, ராஜஸ்தானில், காங்கிரஸ் 129 முதல் 145 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும். பாஜக 52 முதல் 68 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் 5 முதல் 11 இடங்களை பிடிப்பர் என்று கூறப்பட்டது. இதில் டைம்ஸ் நவ் டிவி ஓரளவுக்கு கணிப்பை உறுதி செய்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 85 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 105 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் டைம்ஸ் நவ் தெரிவித்திருந்தது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் பாஜக 102-120 தொகுதிகளை வெல்லும் என்று இந்தியா டுடே எக்சிட் போல் கூறியது. காங்கிரஸ் 104-122 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி இருக்கும் என்றும் இந்தியா டுடே கணிப்பு வெளியிட்டது. ஏறத்தாழ இது உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளுமே தலா 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும் என்று டைம்ஸ் நவ் கூறியது. 126 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 89 தொகுதிகளை வெல்லும் என்றும் டைம்ஸ் நவ் கூறியது. ஆனால் காங்கிரஸ் அங்கு அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தானை தவிர்த்து பார்த்தால் இந்தியா டுடே ஆக்சிஸ் எக்சிட் போல் முடிவுகள் ஏறத்தாழ சரியாக டிரெண்ட்டை கணித்துள்ள. பிற டிவி சேனல்கள் பல மாநிலங்களில் சறுக்கியுள்ளன என்பது தெரிகிறது.

English summary
What are the exit polls are matching with 5 state election results? Here is the comparison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X