ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுடன் சேர்த்து 50 லோக்சபா, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்!
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் மகாரஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் 50 லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நான்தெட் ஆகிய இரண்டும் லோக்சபா தொகுதிகள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களுடன் மொத்தம் 50 லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான் தெட் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல 47 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, கர்நாடகாவில் 3 சட்டசபை தொகுதிகளும் அடங்கும்.
கர்நாடகாவின் சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான முன்னாள் முதல்வர் குமாரசாமி லோக்சபா த்ஏர்தலில் வென்று மத்திய அமைச்சராகிவிட்டார். இதனால் சென்னபட்டணா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications