மாறி மாறி.. 41 வருடத்தில் இத்தனை முறையா! உச்ச நீதிமன்றத்தையே வியக்க வைத்த கணவன் - மனைவி! பரபர வழக்கு
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கணவன் மனைவி தொடுத்த வழக்கு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற இவர்கள் உச்ச நீதிமன்றத்தையே வியப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்!
உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் நீதிபதிகளையே வியப்பிற்கு உள்ளாக்கும் விசித்திரமான வழக்குகள்.
அந்த வகையில்தான் 11 வருடத்திற்கு முன் பிரிந்த கணவன் - மனைவிக்கு இடையிலான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

பல வழக்குகள்
அந்த வழக்கின் மனுதாரர்கள் விவரம் வெளியாகவில்லை. டெல்லியில் வசிக்கும் அவர்கள் இருவரும் 43 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் 11 வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் ஜீவனாம்சமாக மனைவிக்கு கணவர் வீட்டின் ஒரு தளத்தை கொடுக்க வேண்டும், நிதி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதே போல் கணவரும் வீட்டின் ஒரு தளத்தை வழங்கி இருக்கிறார்.

மாமனார் மீது புகார்
இந்த நிலையில்தான் பிரிந்து போன கணவன் மனைவிக்கு இடையில் பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. வருமானம் கொடுப்பது, குழந்தையை படிக்க வைப்பது என்று பல விஷயங்களில் மோதல் வந்துள்ளது. இந்த மோதல் அனைத்திலும் இருவரும் பேசி தீர்க்காமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கீழமை நீதிமன்றம், ஹைகோர்ட் என்று மொத்தம் 43 வருடங்களில் 60 வழக்குகளை போட்டுள்ளனர்.

வீடு
இது போக மாமனார் மீது அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கும் போட்டு இருக்கிறார். இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கணவர் தரப்பு மனுதாரர் மொத்தம் 60 வழக்குகள் இரண்டு தரப்பில் இருந்தும் மாறி மாறி போடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். இதை கேட்ட தலைமை நீதிபதி வியப்பில் ஆழ்ந்தார். சில தம்பதிகள் இப்படித்தான்.. சண்டை போட விரும்புவார்கள்.

சமாதானம்
என்ன விஷயமாக இருந்தாலும் அதை சண்டையில் முடிக்க விரும்புவார்கள். அவர்களால் கோர்ட்டுக்கு செல்ல முடியவில்லை என்றால் தூக்கம் வராது என்று கூறினார். இதையடுத்து இரண்டு பேரிடமும் நீங்கள் சமரசம் செய்ய விரும்புகிறீர்களா.. டெல்லி ஹைகோர்ட் மீடியேஷன் அமர்வு மூலம் அனைத்து வழக்கிலும் சமரசம் பேசலாம் என்று அறிவுரை வழங்கினார். இதை அந்த ஆண், பெண் இருவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்களின் மனு சமரசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சமரச பேச்சுவார்த்தை நடக்கும் போது புதிதாக வழக்கு எதுவும் போட கூடாது என்று அந்த தம்பதிக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications