செல்ஃபி எடுக்கும் போது ஐபோன் அபேஸ்..மொத்தம் 9 செல்போன் மாயம்..டெல்லி அறிவாலய திறப்பு விழா அதிர்ச்சி!
டெல்லி : டெல்லியில் நேற்று நடைபெற்ற அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழாவின்போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் உட்பட ஒன்பது பேரின் செல்போன்கள் மாயமாகி உள்ளதாகவும் இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் 7 எம்பிக்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு அலுவலகம் அமைக்க மத்திய அரசு கடந்த 2006ஆம் ஆண்டு டெல்லியில் நிலம் ஒதுக்கி உள்ளது.
அந்த வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிக அளவில் எம்பிக்களை வைத்திருந்த திமுகவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது.

டெல்லி அறிவாலயம்
இதையடுத்து அங்கு திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் அமைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததோடு kalaignar a life புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு ஆகியோர் பங்கேற்றனர்.

தலைவர்கள் பங்கேற்பு
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் , திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு
மேலும் உபதியாய சாலையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களும் டெல்லி மக்களும் திரளாக நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கூடியிருந்தனர். இதே சாலையில் தான் பாரதிய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்களும் அமைந்துள்ளது. மிகவும் பரபரப்பான இந்த சாலையில் அடிக்கடி செயின் பறிப்பு செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

9 செல்போன்கள் மாயம்
இதனிடையே நேற்று திறப்பு விழாவில் பங்கேற்று வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் மாயமானது. செல்பி எடுக்கும் போது அவரது கைப்பையில் இருந்த விலை உயர்ந்த ஐபோனை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகியது.

போலீசார் விசாரணை
இந்நிலையில்தான் டெல்லியில் நேற்று நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் மட்டுமல்லாது மேலும் 8 பேரது செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் காலங்களில் அங்கு மேலும் பாதுகாப்பை பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications