"ப்ளீஜ் ஹெல்ப்.." மரத்தின் மீது நின்றபடி திரு திருவென முழிக்கும் சிறுத்தை புலி.. வீடியோ!
டெல்லி: 'கம்பீரமாக மாமரத்தில் ஏறிய சிறுத்தைப்புலி ஒன்று எப்படி இறங்குவது என்று தெரியாமல் பரிதவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வனவிலங்குகள் குறித்த வீடியோக்களுக்கு எப்போதும் இணையத்தில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக வனவிலங்குகள் வித்தியாசமான செயல்கள் குறித்த வீடியோக்கள் என்றால் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஹிட் அடித்து விடுகிறது.
அப்படித்தான் தென்னை மரம் ஒன்றில் போட்டி போட்டுக்கொண்டு ஏறும் இரண்டு சிறுத்தைகள் உறுமிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

தென்னை மரத்தில் ஏறும் சிறுத்தைகள்
ஐ.எப்.எஸ் அதிகாரி சுஷாந்த நந்தா இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இருந்தார். பார்ப்பவர்களை சிலிர்ப்பூட்டும் வகையில் சிறுத்தைகள் சண்டையிடும் காட்சிகள் அமைந்து இருந்தன. இந்த காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் தீயாக பரவி வரும் நிலையில், தற்போது மாமரம் ஒன்றில் சிறுத்தை சிக்கிக் கொண்டு இருக்கும் காட்சி ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது.

மாமரத்தில் சிறுத்தைப்புலி
கர்நாடகாவை சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டரில், சிறுத்தை மாமரத்தின் உச்சியில் ஒரு கிளையில் அமர்ந்து இருக்கும் பதிவை பகிர்ந்து இருந்தார். முதலில் பார்ப்பத்ற்கு சிறுத்தை ஓய்வெடுத்து கொண்டு இருப்பது போல தெரிகிறது. ஆனால், உண்மையில் துணிகரமாக மாமரத்தில் ஏறிய சிறுத்தை.. பின்னர் இறங்க வழி தெரியாமல் சிக்கி கொண்டு இருந்துள்ளது.. தெரியவருகிறது.

எப்படி இறங்குவது?
'கம்பீரமாக மேலே ஏறிய சிறுத்தைப்புலி.. எப்படி இறங்குவது என்று தெரியாமல்.. யாராவது உதவி செய்யுங்கள் என்பது போல சிறுத்தைப்புலி அப்பாவியாக மாமரத்தில் நிற்கிறது'. அவ்வழியாக சென்ற மக்கள் சிறுத்தை சிக்கியிருக்கும் தகவலை வனத்துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தைப்புலியை மீட்டனர். இந்த மீட்பு பணியில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சாகசம் நிறைந்த துறை
முன்னதாக மாமரத்தில் சிறுத்தைப்புலி சிக்கியிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருந்த அதிகாரி பிரவீன் கஸ்வான், ''வனவிலங்கு மேலாண்மை என்பது தினமும் சாகசமான துறையாகும். இந்த சிறுத்தை எப்படி மரத்தில் ஏறியது.. இந்த பகுதியை சுற்றிலும் இவ்வளவு மக்கள் கூட்டம் இருக்கும் நிலையில், அந்த நெருக்கடிக்கு மத்தியில் சிறுத்தையை எப்படி மீட்டிருப்பார்கள்.. இதையெல்லாம் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் 7 முதல் 8 மணி நேரத்திற்கு பிறகு யாருக்கும் பாதிப்பு இன்றி சிறுத்தை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் 2- 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications