டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டைல அரிசியை போட்டால் "சொய்யினு" பையில விழும்.. சமூக விலகலை சொல்லி தரும் ரேஷன் கடை.. பெஸ்ட் ஐடியா!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் அவசியமானது என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதை பிற தனியார் மற்றும் அரசு வியாபாரிகளும் கடைப்பிடித்து அரசுக்கு உதவியாக இருக்கிறார்கள். கடைக்காரர்களின் சமூக பொறுப்பை பார்த்து அதிகாரிகளே மெச்சுகின்றனர்.

Recommended Video

    ஊரடங்கை மீறிய பெண்.. காரை நிறுத்தியதால் ஆத்திரம்.. போலீஸை கடித்து ரத்தத்தை தெளித்து மிரட்டல் - வீடியோ

    கொரோனா தற்போது உலகையே விடாது கருப்பு போல் பிடித்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நோய் பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம் என மருத்துவர்களும் அரசும் வலியுறுத்துகிறார்கள்.

    ஆனால் வழக்கம் போல் எந்த அறிவுரையையும் நாம் கேட்பதே இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் கொரோனா வந்த பிறகு புலம்புவதில் என்ன புண்ணியம்? என்னதான் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவை விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மக்கள் காய்கறி கடை, மளிகை கடை,பால் பூத்துகளில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.

    கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி! கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி!

    சமூக உணர்வு

    சமூக உணர்வு

    இந்த கூட்டம் கூடுதல்தான் சமூக பரவலை ஏற்படுத்தி இந்தியாவில் கொரோனாவை அடுத்த நிலையான 3ஆவது நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே அரசு அதிகாரிகளும் சமூக உணர்வு கொண்ட கடைக்காரர்களும் இந்த சமூக விலகலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அந்த வகையில் அண்மையில் ஒரு செய்தியை பார்த்தோம். அதாவது ஒரு கார்ப்பரேஷன் வங்கியில் கவுன்ட்டருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே கயிறு கட்டப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது.

    மருந்துக் கடை

    மருந்துக் கடை

    தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு மதுக்கடையில் சமூக விலகலை கடைப்பிடிக்க இடைவெளிவிட்டு தனித் தனியாக கோடுகள் வரையப்பட்டு அந்த கோட்டில் குடிமகன்கள் நின்று தங்கள் டர்ன் வரும் போது மதுவை வாங்கி செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அது போல் ஆம்பூரில் உள்ள மருந்து கடையில் வட்டங்கள் வரையப்பட்டு அதில் வாடிக்கையாளர்கள் நின்று மருந்துகளை வாங்கிச் சென்றனர்.

    அமைச்சரவை கூட்டம்

    அமைச்சரவை கூட்டம்

    அது போல் புதுச்சேரியில் வரையப்பட்ட வட்டங்களில் வாடிக்கையாளர்கள் நின்று பால் வாங்கிச் சென்றனர். அது போல் அகமதாபாத்திலும் மெஹபூபாநகரிலும் புனேவிலும் மளிகை கடைகளில் சமூக விலகல் கற்றுத் தரப்பட்டது. இந்த கோடுகளும் வட்டங்களும் பெட்டிகளும் கோலமாவு, பெயின்ட் ஆகியவற்றால் வரையப்பட்டன. இவ்வளவு ஏன், நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கூட அமைச்சர்கள் சற்று இடைவெளிவிட்டு போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

    புது ஐடியா

    இந்த நிலையில் கேரளாவில் ஒரு ரேஷன் கடையில் வினோதமான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. எடை போடும் மேஜையை ஒட்டி ஒரு பெரிய 7 இன்ச் பைப் போட்டு இரும்புக் கம்பிகள் மூலம் மேஜையில் அடித்துள்ளனர். ஒரு முனையில் கடைக்காரர் பொருளை போட்டால் மறு முனையில் வாடிக்கையாளர் தயாராக வைத்துள்ள பையில் சொய்யினு போய் விழும். இது வினோதமாகவும் புது ஐடியாவாகவும் உள்ளது. இது போல் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பின்பற்றலாமே!.

    English summary
    A ration shop in Kerala follows Social Distancing in an innovative way. It's the best idea in the time of Coronavirus. Milk Booth, Grocery shops uses social distancing in various places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X