கொரோனாவில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்.. கேரளா செய்ய வேண்டியது என்ன?.. சுகாதார அதிகாரிகள் விளக்கம்!
டெல்லி: நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் தினமும் 20,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது ஓணம் பண்டிகைக்கு பிறகு கடந்த சில நாட்களாக 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன.இன்று மட்டும் கேரளாவில் 32,803 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. கொரோனாவுக்கு மேலும் 173 பேர் உயிரிழந்தனர்.
மொத்த உயிரிழப்பு 20,961 ஆக இருக்கிறது. கொரோனாவுக்கு 2,29,92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதாவது தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன.

வழிமுறைகளை பின்பற்றவில்லை
கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிடிவ் ரேட்) தொடர்ந்து 18 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதுபோக கேரள அரசு மத்திய அரசு அறிவுறுத்தும் கட்டுப்பாடு விதிகளை முறையாக பின்பற்றாததும் வைரஸை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கேரளாவில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், கேரள மக்கள் முழுமையான தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.

ஸ்மார்ட் ஸ்ட்ராடஜிக் ஊரடங்கு
கேரளாவில் கொரோனா எழுச்சியை கட்டுப்படுத்த ஸ்மார்ட் ஸ்ட்ராடஜிக் ஊரடங்கு தேவை என்று மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியுள்ளன. கேரளா மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், குக்கிராம ஊரக பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட சுற்றுப்புறங்களில் மிக மிக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடமாட்டம் குறையணும்
கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மக்களின் நடமாட்டத்தை குறைத்தல் ஆகியவை சில அம்சங்களில் அரசு அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் குணமடையும் நோயாளிகள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை, அதனால் தான் கேரளாவால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்கள்.

தாக்கம் ஏற்படுத்தும்
கேரளாவின் வாராந்திர நேர்மறை விகிதம்(பாசிட்டிவ் ரேட்) 14-19 சதவிகிதமாக உள்ளது. இது அண்டை மாநிலமான கர்நாடகா, தமிழ்நாட்டிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கேரள எல்லை பகுதிகளில் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

முழு ஊரடங்கு அவசியம்
கேரளா ஓணம் பண்டிகைக்கு கொடுத்த தளர்வைதான் இப்போது பெரும் தொற்றால் அனுபவித்து வருகிறது என்று பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். கேரளாவில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் இது வைரஸை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட போதாது. குறைந்தது ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கு போட்டால்தான் கேரளாவால் கொரோனாவில் இருந்து மீள முடியும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications