டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஜ் தக் எக்ஸிட் போல்.. 365 தொகுதிகளில் வெல்லுமாம் பாஜக, காங்கிரசுக்கு 108 இடங்கள் என கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்ததையடுத்து தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நேற்று மாலை முதல் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிரபல ஊடகமான ஆஜ் தக் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ளது.

    நேற்று மாலை முதல் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் ஆளும் பாரதிய ஜனதாவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனெனில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ள பெரும்பாலான முன்னணி ஊடகங்கள், பாரதிய ஜனதாவே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளன.

    Aaj Tak Exit poll ... BJP will win in 365 seats in lok sabha election 2019

    எக்ஸிட் போல் முடிவுகளானது தேர்தலுக்கு பின் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என கேட்டு, அதனை அடிப்படையாக வைத்து கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி உண்மையான களநிலரத்தை பிரதிபலிக்கவில்லை என கூறி எக்ஸிட் போல் முடிவுகளை நிராகரித்துள்ளது.

    பிரபல ஊடகமான ஆஜ் தக் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா குறைந்தபட்சமாக 339 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 365 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா கூட்டணி வெல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆஜ் தக் கணித்துள்ளது.

    அதே போல காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சமாக 77 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்சமாக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது

    மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் உதவியுடன் பாஜக விஸ்வரூப பாய்ச்சல்? மமதாவுக்கு மரண அடியா? மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் உதவியுடன் பாஜக விஸ்வரூப பாய்ச்சல்? மமதாவுக்கு மரண அடியா?

    பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் சுமார் 69 முதல் 95 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆஜ் தக் எக்ஸிட் போல் கூறுகிறது

    வரும் வியாழனன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது கணித்து கூறப்பட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் மக்களின் எண்ணத்தை தான் பிரதிபலித்துள்ளனவா என்பது அன்றைய தினம் தெரிய துவங்கி விடும்.

    English summary
    In a exit poll published by the popular media Aaj Dak, it is said that the BJP will retain power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X