இந்தியாவில் நுழைந்த பிஎப்.7 ஓமிக்ரான் திரிபு வைரஸ்.. சீனாவை போல் பாதிப்பு அதிகரிக்குமா? முழுவிபரம்
டெல்லி: சீனாவில் வேகமாக பரவி வரும் BF.7 ரக ஓமிக்ரான் திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், ஒடிசாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில் BF.7 ரக வைரஸ் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தை முடக்கி போட்டது. உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர்.
மேலும் பலகோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து நலமடைந்தனர். கடந்த 6 மாதமாக இந்தியா உள்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

சீனாவில் மீண்டும் அதிகரிப்பு
இந்நிலையில் தான் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைத்தூக்க துவங்கி உள்ளது. சீனாவில் கொரோனாவின் உருமாறிய வகையான BF.7 வகை ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் தான் முக்கிய காரணமாகும். சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரசேில், ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் சீனாவில் பரவிய இந்த திரிபு வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அலர்ட் நிலையில் இந்தியா
இந்நிலையில் தான் இந்தியாவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினார். மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்பான சோதனைகளை அதிகரிக்க வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பு மற்றும் தொற்றை கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்கவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் அரசு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியாவில் BF.7னால் 3 பேர் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் BF.7 ஒமிக்ரான் திரிபு வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இருவருக்கும், ஒடிசாவை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஒமிக்ரான் திரிபு வைரஸான BF.7 வைரஸ் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

BF.7 வைரஸ் என்றால் என்ன?
சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வர முக்கிய காரணம் அங்கு பரவி வரும் ஓமிக்ரானின் BF.7 வகை வைரஸ் தான். தற்போது பரவும் BF.7 வகை வைரஸ் என்பது ஓமிக்ரான் BA.5 என்பதன் வரிசையில் ஏற்பட்ட மாறுபாடாகும். BF.7 என்பது BA.5.2.1.7க்கான பெயர், இது BA.5 துணை மாறுபாட்டிலிருந்து உருவானது.

முதல் முறையல்ல...
இந்த வைரஸ் இதற்கு முன்பு அக்டோபரில் அமெரிக்கா உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது. தற்போது சீனாவில் இந்த வைரஸ் பரவியது. அக்டோபரில் அமெரிக்காவில் 5 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகளிலும், இங்கிலாந்தில் 7 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் பரவும் வைரஸ்
இந்தியாவில் 2022 ஜனவரியில் கொரோனா பாதிப்பு என்பது ஓமிக்ரான் BA.1 மற்றும் BA.2 வகையால் ஏற்பட்டது. அதன்படி BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றின் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இது ஐரோப்பியா நாடுகளில் அதிகமாக இருந்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியது தான் பாதிப்பு குறைய காரணமாக இருந்தது. தற்போதும் BA.5 வகையை தொடர்ந்து ஓமிக்ரான் BA.7 வகை வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.

வேகமாக பரவுமா?
மேலும் சீனாவின் நிலைமையை கண்காணிக்கும் போது ஓமிக்ரானின் பிற வைரஸ்களை காட்டிலும் BF.7 மாறுபாடு கொண்ட வைரஸ் வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது. இது எளிதாக பொதுமக்களை தாக்குகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களை விடாமல் இந்த வகை வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான் இந்தியாவிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த வகை வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுமா? இல்லையா? என்பது பற்றி இன்னும் சுகாதாரத்துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications