டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்வானை தொடர்ந்து.. மேலும் சில பகுதிகளிலும் சீனா அட்டகாசம், இந்திய ராணுவத்துடன் உரசல்! பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கின் பாங்கோங் த்சோ பகுதியிலும், கல்வான் நதி பள்ளத்தாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியிலும், இந்திய ராணுவத்திடம் உரசிய சீனா, இப்போது பெட்ரோலிங் பாயிண்ட்ஸ் 10 மற்றும் 13 ஆகியவற்றுக்கு இடையேயும் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது.

உண்மையான கட்டுப்பாடு கோடு அருகேயுள்ள, தவுலத் பெக் ஒல்டி செக்டார் பகுதியில், இந்திய ராணுவம் ரோந்து செய்ய விடாமல், சீன ராணுவம் தடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரகோரம் பாஸுக்கு அருகிலுள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க இதுபோல சீனா முயற்சி செய்வதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்களை இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தடாலடி.. தென்சீன கடல் எல்லையில் இரவோடு இரவாக போர் கப்பல்கள் குவிப்பு.. கலக்கத்தில் சீனா!அமெரிக்கா தடாலடி.. தென்சீன கடல் எல்லையில் இரவோடு இரவாக போர் கப்பல்கள் குவிப்பு.. கலக்கத்தில் சீனா!

சாலை வசதி

சாலை வசதி

இந்திய எல்லைக்கு அருகே உள்ள, உள்ள ஷென்சென் பகுதி வழியாக பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பாவை நோக்கி நெடுஞ்சாலை பணிகளை செயல்படுத்தி வருகிறது சீனா. இந்த சாலை வசதியை விரிவுபடுத்த, சீனா, இதுபோன்ற சேட்டைகளில் ஈடுபடுவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

ரோந்து செல்வதை தடுக்கும் சீனா

ரோந்து செல்வதை தடுக்கும் சீனா

"டிபிஓ செக்டாரில், சீனர்கள் தொல்லைகளை உருவாக்க விரும்புகிறார்கள், மேலும் அந்த பகுதியில் 10 முதல் 13 வரையிலான ரோந்துப் பாயிண்டுகளுக்கு செல்வதை தடுக்கிறார்கள். இவை கல்வான் நதி பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள பகுதிகளாகும். டிபிஓ செக்டாரிலுள்ள இந்திய பட்டாலியன்களுக்கு இது அருகாமையில் உள்ள இடம், " என்று சில ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீரங்கிகள்

பீரங்கிகள்

பிபி 15, பிபி 17 மற்றும் பிபி 17 ஏ ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கனரக வாகனங்கள் மற்றும் பீரங்கிகளை எல்லைக் கட்டுப்பாட்டுக்கு அருகே, நகர்த்துவதற்காக சீனர்கள் தங்கள் சாலை உள்கட்டமைப்பை பின்புற பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சீன துருப்புகள்

சீன துருப்புகள்

இந்த பகுதிகளில் ஓரளவு படைகளை குறைக்க இரு நாடுகளுக்கும் ஒருமித்த கருத்து இருந்தபோதிலும், சீனர்கள் தங்கள் துருப்புக்களின் இயக்கம் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துவிட்டனர். பாங்கோங் த்சோவின் ஃபிங்கர் பகுதியிலும், சீனர்கள் தொடர்ந்து தங்கள் படைகளை அதிகரித்து, ஃபிங்கர் 4 மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் தங்கள் நிலைகளை பலப்படுத்தியுள்ளனர்.

விமான எதிர்ப்பு துப்பாக்கி

விமான எதிர்ப்பு துப்பாக்கி

சீன ராணுவத்தினர் சுகோய் -30 போர் விமானங்களை பின்புற பகுதியில் நிறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் இந்திய எல்லைக்கு அருகில் வழக்கமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர விமான வான் பாதுகாப்பு துப்பாக்கி பேட்டரிகள் சீன ராணுவத்தால் குவித்து வைக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் ரோந்து அதிகரித்துள்ளதால், அவற்றை சமாளிக்க, இதுபோன்ற விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்தியாவும் சீனாவும் இதுவரை இரண்டு சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. தங்கள் படைகளை குறைத்துக்கொள்ள அப்போது ஒப்புக்கொண்டது. ஆனால், நிஜத்தில் நிலவரம் அப்படியில்லை என்றும், மேலும் பல பகுதிகளிலும் அவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு அவர்கள் மேலும் விலக ஒப்புக் கொண்டுள்ளனர்.

English summary
Military sources have revealed that China has been blocking Indian army patrols from going up to patrolling points 10 to 13 in the Daulat Beg Oldi sector near the LAC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X