Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சநீதிமன்றம் வரை சென்ற அக்னிபாத் போராட்டம்! திட்ட ஆய்வுக்கு நிபுணர்குழு அமைக்க பொதுநல மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்ட வன்முறை, சொத்து சேதம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கவும், திட்டம் ஆய்வுக்காக உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில ஆள்சேர்ப்புக்கான புதிய திட்டமாக அக்னிபாத் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் முப்படையில் இணைந்து சேவையாற்ற முடியும்.

இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 போராட்டம் - வன்முறை

போராட்டம் - வன்முறை

குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் ரயில்களுக்கு தீவைத்து, ரயில் நிலையங்களை சூறையாடி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் இத்திட்டத்தை எதிர்த்து 3வது நாளாக கடும் போராட்டம் நடந்தது. செகந்திராபாத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.

ரயில்வேக்கு ரூ.200 கோடி இழப்பு

ரயில்வேக்கு ரூ.200 கோடி இழப்பு

இந்த திட்டம் மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதால் இளைஞர்கள் ரயில் நிலையங்களை குறிவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ரயில் சேவை பாதிக்கபப்ட்டுள்ளது. மொத்தம் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாகி உள்ளன. இதில் 40 பெட்டிகள் முற்றிலுமாக எரிந்த நிலையில் 234 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான ரயில்களின் பயண தூரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை துவங்கிய போராட்டத்தின் காரணமாக தற்போது வரை இந்தியன் ரயில்வேக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 பொதுநல மனுத்தாக்கல்

பொதுநல மனுத்தாக்கல்

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றன. இதனால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ரயில் பெட்டிகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மத்திய ரயில்வே சார்பி்ல 164 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் பயணத்துக்கு பதில் பஸ்களில் பயணிக்கின்றனர். நெடுஞ்சாலைகளில் மறியல் நடப்பதால் அங்கும் பாதிக்கப்படுகின்றனர்.

 எஸ்ஐடி விசாரணை

எஸ்ஐடி விசாரணை

செய்திகள் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான 300 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 200 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வன்முறை போராட்டம், சொத்து சேதம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க வேண்டும். மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் இத்திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+