அப்போ செந்தில் பாலாஜி நேபாளத்திற்கு தப்பிச் செல்ல மாட்டாரா? அரசு தரப்பு கேட்டதுமே கபில் சிபல் வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய வழக்கில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கபில் சிபல் இடையே லேசான வாக்குவாதம் நடந்தது.

2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

Senthil Balaji tasmac corruption case

இதை அடிப்படையாக கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. அதாவது டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்றது, போலி கொள்முதலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என கருதிய செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். அங்கு அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் செந்தில் பாலாஜி சார்பில் வாதிட்டனர். அது போல் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹரிபிரியா பத்மநாபன், மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தாவே ஆகியோர் மாநில அரசு சார்பாக ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவரால் வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்பட கூடாது. வழக்கின் சாட்சிகளை செந்தில் பாலாஜி உடைக்க நேரிட்டால் தமிழக அரசு தாராளமாக உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் செந்தில் பாலாஜி ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

அதற்கு கபில் சிபல், "பாஸ்போர்ட் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும் போது ஏன் மறுபடியும் பாஸ்போர்ட்டை கேட்கிறார்கள் என புரியில்லை" என்றார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தாவே, "அப்போ செந்தில் பாலாஜி நேபாளத்திற்கு தப்பிச் செல்ல மாட்டார், அப்படித்தானே" என கேட்டார். அதற்கு சிபல், "யாரிடமும் இரு பாஸ்போர்ட்கள் இருக்காது" என்றார். அதற்கு தாவே, "யாருக்கு தெரியும்" என்றார். இப்படியே இரு தரப்புக்கு இடையே வாதம் ஏற்பட்டது. இந்த வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+