டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா, பாகிஸ்தான் ஜோடியா எதிர்த்தாலும்... அதை முறியடிக்க நமது ராணுவம் ரெடி... எம்.எம்.நாரவனே உறுதி!

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வந்தாலும் நாம் அதனை திறம்பட கையாள்வோம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் நமது படைகள் தேசிய நலன் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடை பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

Army Chief says Pakistan, China form potent threat, ready to meet any eventuality

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து நமது தேசிய பாதுகாப்புக்கு ஒரு சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன, இந்த கூட்டு அச்சுறுத்தலை விரும்ப முடியாது. ஒரே நேரத்தில் இருமுனை அச்சுறுத்தல் சூழ்நிலையை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

ரூ. 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் ரூ. 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

கடந்த ஆண்டு நாம் இதுபோன்ற சவால்களில்(லடாக் விவகாரம்) பேச்சுவார்த்தையை கடைப்பிடித்து சவால்களைச் சமாளிக்கும் சந்தர்ப்பத்திற்கு உயர வேண்டியிருந்தது. தேசம் எதிர்கொள்ளும் எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க நாம் முழுமையாக தயாராக இருக்கிறோம். கிழக்கு லடாக்கில் நமது படைகள் தேசிய நலன் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடை பிடிக்கும் என்று எம்.எம்.நாரவனே கூறினார்.

English summary
"Even if Pakistan and China pose a threat to our national security, we will deal with it effectively," said Indian Army Commander General MM Narwane
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X