Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி பல்கலையில் களேபரம்.. மாணவர்களை தரதரவென இழுத்துசென்ற போலீசார்.. பிபிசி ஆவணப்படத்தால் 144 தடை

பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்துடன் தொடர்புபடுத்திய பிபிசி ஆவணப்படம் சர்ச்சையால் டெல்லி பல்கலைக்கழகத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்று பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற நிலையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் தடையை மீறி நடந்து கொண்டதால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பெரிய கலவரம் வெடித்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் பிபிசி குஜராத் கலவரம் குறித்து 2 பகுதிகளாக ஆவணப்படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது.
‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியான முதல் பாகத்துக்கே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தியாவில் தடை

இந்தியாவில் தடை

இந்தியாவில் ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கிடையே ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு காங்கிரஸ் கட்சியினர் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். மேலும் பல பல்கலைக்கழக மாணவர்களும் பிபிசி ஆவணப்படத்தை தடையை மீறி திரையிடுவதோடு, திரையிடும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழங்களில் திரையிட

பல்கலைக்கழங்களில் திரையிட

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரிலான மாணவர் அமைப்பின் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டு சர்ச்சையை கிளப்பினர். முன்னதாக டெல்லி ஜேஎன்யூ எனும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிட முயன்ற நிலையில் மின்சாரம், இணையசேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பல பல்கலைக்கழங்களில் பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சிகளை மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

 டெல்லி பல்கலையில் திரையிட முயற்சி

டெல்லி பல்கலையில் திரையிட முயற்சி

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று டெல்லி பல்கலைழக்கழகத்தில் திரையிட போவதாக மாணவர்கள் அமைப்பினர் அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ பிரிவினர் மாலை 4 மணிக்கும், பீம் ஆர்மி எனும் மாணவர் அமைப்பினர் மாலை 5 மணிக்கும் பல்கலைழக்கதழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதாக அறிவிப்பு செய்தனர்.

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி டெல்லி பல்கலைழக்கழகத்தை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதோடு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

தரதரவென இழுத்து கைது

தரதரவென இழுத்து கைது


இதற்கு மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை அவர்கள் திரையிட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் பீம் ஆர்மி மாணவ அமைப்புகளை சேர்ந்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அதிரடியாக கைது செய்தனர். இந்த வேளையில் மாணவர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமிறி எழுந்தனர். இருப்பினும் விடாத போலீசார் அவர்களை தரதரவென இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+