டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவாக்சின் தடுப்பூசி.. 77.8% பயன்.. பாரத் பயோடெக் வெளியிட்ட 3ம் கட்ட சோதனை முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி : பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட 3 ஆம் கட்ட சோதனைகளில் கோவாக்சின் 77.8% செயல்திறனைக் காட்டியுள்ளதாக பாரத் பயோடெக் வட்டாரங்கள் அரசின் அமைப்புகளிடம் தெரிவித்துள்ளன.

அரசின் பொருள் நிபுணர் குழு (எஸ்.இ.சி) பாரத் பயோடெக்கின் தரவினை மதிப்பாய்வு செய்வதற்காக இன்று மதியம் கூடியது. அப்போது எஸ்.இ.சி குழுவிற்கு பாரத் பயோடெக் கோவேக்சின் குறித்து விவரங்கள் வழங்கப்பட்டன.அந்த தரவுகளின் படி கோவாக்சினின் 77.8% செயல்திறனைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Bharat Biotech said Covaxin shows 77% efficacy in Phase 3 trials

அரசின் எஸ்.இ.சி குழு ஆய்வு செய்த பின்னர் கோவேக்சின் குறித்த தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) பரிசீலனைக்கு அனுப்பும்.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவாக்சின் எப்படி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பும் பாரத் பயோடெக்கின் ஆர்வத்தை ஏற்றுக்கொண்டது,. பாரத் பயோடெக் நாளை (ஜூன் 23 ஆய்வை) சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. WHO அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு கோவாக்சின் ஒரு படி மேலே செல்ல இது உதவும் என்று பாரத் பயோடெக் எதிர்பார்க்கிறது.

இந்த கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி பற்றிய விரிவான மறுஆய்வு செய்யப்படாது என்றாலும், மருந்தின் ஒட்டுமொத்த தரம் குறித்த சுருக்கத்தை சமர்ப்பிக்க இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நம்புகிறது.

அப்பாடா.. கோவாக்சின் 3வது கட்ட டிரையல் முடிவுகளை சமர்ப்பித்தது பாரத் பயோடெக்.. அடுத்து என்ன? அப்பாடா.. கோவாக்சின் 3வது கட்ட டிரையல் முடிவுகளை சமர்ப்பித்தது பாரத் பயோடெக்.. அடுத்து என்ன?

பாரத் பயோடெக் கடந்த மாதம் ஜூலை-செப்டம்பர் மாத வாக்கில் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்காக உலக சுகாதார மையத்தி ஒப்புதலுக்காக கோவாக்சினை அனுப்பியது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

English summary
the results of Phase 3 clinical trials of Bharat Biotech’s Covaxin vaccine have come. Data from the Phase 3 trials of Covaxin show the vaccine against Covid-19 is 77.8% effective.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X