டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட் நியூஸ்..பிரிட்டன்& இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு..எதிராக வேலைசெய்யும் கோவாக்சின்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended Video

    இரட்டை மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராகவும் Covaxin செயல்படுகிறது - Dr. Fauci

    கொரோனா வைரசின் 2ஆம் அலையால் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

    டவ்தே புயலால் மிக கனமழை.. மின் விநியோகம் பாதிக்கப்படலாம்.. கொரோனா நோயாளிகளை காக்க என்ன நடவடிக்கைடவ்தே புயலால் மிக கனமழை.. மின் விநியோகம் பாதிக்கப்படலாம்.. கொரோனா நோயாளிகளை காக்க என்ன நடவடிக்கை

    இருப்பினும், இந்தத் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா பரவுவதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை. இதனால் உருமாறிய கொரோனாவை இந்தத் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துமா என மக்களிடையே சந்தேகம் எழுந்தது.

    உருமாறிய கொரோனா வகைகள்

    உருமாறிய கொரோனா வகைகள்

    இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக வேலை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

    சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

    சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

    இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கொரோனா வகை (B.1.1.7) மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக போதியளவு செயல்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் கோவாக்சின் தடுப்பூசி செயல்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ட்வீட் செய்துள்ளார்.

    நம்பகத்தன்மை

    நம்பகத்தன்மை

    இந்த ஆய்வு முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அப்போது கோவாக்சின் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுக்கு வரவில்லை. இதனால், கோவாக்சின் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

    தடுப்பூசி தட்டுப்பாடு

    தடுப்பூசி தட்டுப்பாடு

    இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும்கூட தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பாரத் பயேடெக், சீரம் தவிர நாட்டிலுள்ள மற்ற நிறுவனங்களிலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    Bharat Biotech's latest statement on Covaxin's efficacy on UK and Indian Variant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X