3 நாட்களும் கண்டிப்பாக வர வேண்டும்.. பாஜக எம்பிகளுக்கு விப் நோட்டீஸ்.. என்ன காரணம்?
பாஜக கொறடா சார்பாக அக்கட்சி எம்பிகளுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: பாஜக கொறடா சார்பாக அக்கட்சி எம்பிகளுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 35000 ராணுவ வீரர்கள் புதிதாக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காஷ்மீர் விஷயத்தில் மத்திய பாஜக அரசு முக்கியமான நடவடிக்கையை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டங்களை மத்திய அரசு நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக கட்சி சார்பாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான மசோதாக்கள் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. முத்தலாக் மசோதா, என்ஐஏ மசோதா, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா எல்லாம் பெரிய சர்ச்சையானது.
இப்படி அடுத்தடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கு இடையில் தற்போது பாஜக கொறடா பாஜக எம்பிக்கள் எல்லோருக்கும் விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.
பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக லோக்சபா மாற்று ராஜ்ய சபாவிற்கு வர வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என்று கொறடா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு முக்கியமான சட்டம் எதையாவது நிறைவேற்ற வாய்ப்புள்ளது, அல்லது அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டங்களை நீக்க வாய்ப்புள்ளது என்பதால், இந்த விப் நோட்டீஸ் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications