டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“பீஸ் பீஸா” வெட்டிடுவேன்.. 2020லேயே மகாராஷ்டிரா போலீஸில் ஸ்ரத்தா புகார்! உத்தவ் தலையை உருட்டும் பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: காதலியை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டை திடுக்கிட செய்து இருக்கும் சூழலில் 2020 ஆம் ஆண்டு ஸ்ரத்தா ஆப்தாப் மீது மகாராஷ்டிரா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கும் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலா பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.

டெல்லியில் லிவ் இன் வாழ்க்கை நடத்தி வந்த ஆப்தாப் பூனாவாலாவுக்கு ஸ்ரத்தா வாக்கருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சச்சரவுகள் தொடர்ந்து இருக்கின்றன. இதற்காக ஸ்ரத்தா வாக்கரை ஆப்தாப் பல்வேறு வகைகளில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ட்விஸ்ட்! கடைசி நொடியில் பின்வாங்கிய பாஜக! அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலை தட்டி தூக்கிய உத்தவ் சிவசேனாட்விஸ்ட்! கடைசி நொடியில் பின்வாங்கிய பாஜக! அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலை தட்டி தூக்கிய உத்தவ் சிவசேனா

ஸ்ரத்தா கொலை

ஸ்ரத்தா கொலை

இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் டெல்லியில் இருவருக்கும் இடையே நடந்த தகராறின்போது ஆத்திரமடைந்த ஆப்தாப் ஸ்ரத்தாவை தாக்கி கொடூரமாக கொலை செய்து உள்ளதாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. மேலும் அதிலிருந்து தப்பிக்க ஸ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் போட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

6 மாதம் கழித்து..

6 மாதம் கழித்து..

மீதம் இருந்த துண்டுகளை வாடை வரக்கூடாது என்பதற்காக ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்து அதில் வைத்து ஆப்தாப் பாதுகாத்து வந்து இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 மாதங்களாக யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்த ஆப்தாப், ஸ்ரத்தாவை காணவில்லை என அவரது தந்தை கொடுத்த புகாரால் தற்போது போலீசில் பிடிபட்டு இருக்கிறார்.

 ஆப்தாப் விளக்கம்

ஆப்தாப் விளக்கம்

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தன. ஸ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கோபத்தில் என்ன செய்வதென்று அறியாமல் ஸ்ரத்தாவை கொன்றுவிட்டேன் என் ஆப்தாப் தெரிவித்துள்ளார்.

2020 லெட்டர்

2020 லெட்டர்

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஆப்தாப் மீது ஸ்ரத்தா மகாராஷ்டிரா மாநிலம் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அதில், "இன்று அவன் என்னை கொலை செய்ய முயன்றான். கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினான். பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று கூறினான்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவும் அவன் இதேபோல் என்னை தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையத்திற்கு வந்து புகாரளிப்பதற்கான தைரியம் இல்லை. ஏனென்றால் அப்போதும் அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தான். " என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 வாபஸ் பெற்ற ஸ்ரத்தா

வாபஸ் பெற்ற ஸ்ரத்தா

இதுகுறித்து மகாராஷ்டிரா போலீஸ் அளித்து இருக்கும் விளக்கத்தில், ஸ்ரத்தா வாக்கர் அளித்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதால் விசாரணை கைவிடப்பட்டது என்று கூறி உள்ளது. வாக்கர் தனது நண்பர்களுடன் காவல்நிலையத்துக்கு சென்று இந்த புகாரை வழங்கி இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடன் சென்ற நண்பர்

உடன் சென்ற நண்பர்

ஸ்ரத்தாவுடன் அப்போது காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற காட்வின் ரோட்ரிகஸ் தெரிவிக்கையில், "ஸ்ரத்தா 2020 ஆம் ஆண்டு இங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்தார். எனது சகோதரரும் அங்கு பணிபுரிந்தார். தனது மேலாளரிடம் தான் தாக்கப்பட்டதை அவர் கூறி இருக்கிறார்.

கொடூர தாக்குதல்

கொடூர தாக்குதல்

அதன் பிறகே அவர் எனது உதவியை நாடினார். அவரை ஆப்தாப் கொடூரமாக தாக்கி இருந்தது தெரியவந்தது. எப்படியோ தப்பித்து அவர் காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்தார்." என்றார். அவோரு புகாரளிக்க சென்ற ராகுல் ராய் என்ற என்ற ஓட்டுநர், ஸ்ரத்தாவுக்கு உள் காயங்கள் இருந்ததாக தெரிவித்து உள்ளார்.

தேவேந்திர பட்னவிஸ்

தேவேந்திர பட்னவிஸ்

ஸ்ரத்தா புகாரளித்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்தவர் உத்தவ் தாக்கரே. எனவே இதனை அவருக்கு எதிராக திருப்புகிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த பிரச்சனையை மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கிளப்பி உள்ளார்.

உயிரோடு இருந்திருப்பார்

உயிரோடு இருந்திருப்பார்

இதுகுறித்து பேசிய அவர், "மகாராஷ்டிரா காவல்துறை எதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணை மேற்கொள்ள வேண்டும். அன்றே ஆப்தாப் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் ஸ்ரத்தாவை காப்பாற்றி இருக்கலாம். இன்று உயிரோடு இருந்திருப்பார்." என்றார்.

English summary
The murder in Delhi that cutting Shraddha into 35 pieces by Aftab is shooked the country. In 2020 the letter in which she filed a complaint against Aftab in the Maharashtra police station. Now BJP turns Sharaddha murder case against Uddhav Thackeray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X