டாலருக்கு பெரிய அடி இருக்கு! இந்தியா கொடுக்கப்போகும் ஷாக்! BRICS Pay கேம் தொடங்கியாச்சு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செப்.12 மற்றும் 13ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் 18வது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் BRICS Pay குறித்து இந்திய மிக முக்கிய முடிவை எடுக்க இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் கரன்சியான டாலருக்கு மவுசு குறையும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் இந்தியா ஒன்றும் டாலரை வீழ்த்தப்போவதில்லை. அதற்கு பதிலாக.. இந்தியா தனது சொந்த கரன்சியின் மதிப்பை அதிகரிக்கப்போகிறது. இதை BRICS Pay மூலம்தான் நாம் செய்ய இருக்கிறோம்.

BRICS Pay

UPI பணப்பரிவர்த்தனையை நாம் பரவலாக பயன்படுத்துகிறோம். இது இந்திய அரசின் முக்கியமான கண்டுபிடிப்பு. இந்தியாவில் மட்டுமல்லாது பிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு என 10க்கும் அதிகமான நாடுகளில் இந்த UPI பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் UPI மாதிரி, சீனாவில் CIPS, பிரேசிலில் Pix, ரஷ்யாவில் SPFS இருக்கிறது. இதை அனைத்தையும் இணைக்கும் திட்டம்தான் BRICS Pay. இந்த திட்டம் டாலரை பலவீனப்படுத்தும்.

சிம்பிளாக சொல்ல வேண்டும் எனில், அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இதை நம்மூர் ரூபாய் கொடுத்து வாங்க முடியாது. அமெரிக்க டாலரை கொடுத்தால்தான் அவர்கள் எண்ணெய் தருவார்கள். எனவே நம்மூர் ரூபாயை கொடுத்து முதலில் டாலரை வாங்க வேண்டும். பின்னர், அந்த டாலரை வைத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். இதெல்லாம் தலையை சுற்றி காதை தொடும் கதை. இப்படி வர்த்தகம் செய்வதால், டாலரை மாற்ற இடைத்தரகர்களுக்கு நாம் கொடுக்கும் கமிஷன் அதிகமாக இருக்கும்.

இந்த பிரச்சனையை சமாளிக்கதான் BRICS Pay தேவைப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு, பிரிக்ஸ் நாடுகளுக்குள் தங்கள் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்துக்கொள்ளலாம். டாலரை பகைத்துக்கொண்டு இந்தியாவால் இருக்க முடியாது. BRICS Pay-ல் டாலரை நாம் நேரடியாக எதிர்க்கப்போவதில்லை. அதற்கு பதிலாக நம்மூர் கரன்சியை முன் நிறுத்துகிறோம். இப்படி செய்வதால் இந்தியாவுக்கு பெரிய அளவுக்கு சிக்கல் வராது.

தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரின் PayNow அமைப்புடன் UPI நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நேபாளத்தின் NPI மற்றும் மாலத்தீவின் Favara அமைப்புகளுடனும் UPI இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே BRICS Pay உருவாக்கினால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்பும்போது ஏற்படும் கமிஷன் கட்டணங்கள் பெருமளவு குறையும். உலக வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாடு அதிகரித்து அதன் சர்வதேச அந்தஸ்து வலுப்பெறும்.

இந்தியா இந்த ரூட்டில் செல்வதால், சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்தாலும், அதிகரித்தாலும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பெரும் பொருளாதார சுனாமியே வந்தாலும் கூட.. பொரிகடலை சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கலாம். இருப்பினும் இந்தியாவின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன உளிறி வைக்கப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+