பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் மகளுக்கு பரம்பரை சொத்தில் பங்கு இருக்கா? முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு மகள் பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டால், பரம்பரை சொத்துகளில் அவருக்கான உரிமையை தந்தையால் மறுக்க முடியுமா? HUF, அதாவது Hindu Undivided Familyல் பிரிவினையை கோரும் மகளுக்கு, தந்தை நிச்சயம் பங்கு வழங்க வேண்டுமா? மற்ற குடும்ப உறுப்பினர்கள் சொத்துகளைப் பிரிக்க விரும்பாவிட்டாலும், மகள் மட்டும் தனக்கான பங்கை கோர முடியுமா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!

பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்ட மகள், குடும்பத்தின் பரம்பரை சொத்துகளை பிரித்துத் தனது பங்கை கொடுக்குமாறு கோரியுள்ளார். அவர் இப்படி பாக பிரிவினை கேட்க சட்டப்படி உரிமை உள்ளதா? அவரது கோரிக்கையை ஏற்று பெற்றோர் சொத்துகளை பிரித்துக் கொடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

Ancestral Property HUF Rules

வல்லுநர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இந்து சட்டத்தின்படி, HUFல் பங்கு கொண்ட உறுப்பினர் ஒருவர், குடும்ப சொத்துகளில் தனக்குரிய பங்கை பெறுவதற்காக பிரிவினையை கோரலாம். 1956 இந்து வாரிசுரிமை சட்டத்தில் கடந்த 2005 செப்டம்பர் மாதம் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பரம்பரை சொத்துகளில் மகள்களுக்கும் மகன்களுக்கு இணையாக பங்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மகளும் பரம்பரை சொத்துகளில் தனக்குரிய பங்கை பெறுவதற்காக பிரிவினை கோருவதற்கு உரிமை பெற்றவர். அவர் பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக மட்டும் இந்த உரிமையை மறுக்க முடியாது. மகளின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு சட்டப்படி உரிய பங்கை வழங்க வேண்டும்" என்கிறார்கள்.

பிரித்து கொடுக்க வேண்டும்

அதேநேரம் குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனக்குரிய பங்கை பிரித்துக் கேட்டால், குடும்பத்தின் மொத்த சொத்துகளையும் பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த ஒருவருக்கு மட்டும் அவருக்கான சொத்தை பிரித்து கொடுத்துவிடலாம். மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பரம்பரை சொத்துகளை கூட்டாக வைத்திருந்திருக்கலாம். இந்து சட்டத்திலோ வருமான வரி சட்டத்திலோ பகுதியளவிலான பிரிவினைக்கு தடை இல்லை. அதாவது, மகளுக்குரிய பங்கை மட்டும் ஒதுக்கிவிட்டு, மற்ற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக குடும்ப சொத்தை தொடர்ந்து வைத்திருக்கலாம்.

வருமான வரி

ஆனால், இதில் வருமான வரி தொடர்பான முக்கியமான சிக்கல் இருக்கிறது. இதுபோல பரம்பரை சொத்துகளை பகுதியளவுக்கு பிரிப்பதை வரி ரீதியாக வருமான வரி சட்டம் அங்கீகரிப்பதில்லை. குடும்பத்தின் சொத்துகள் முழுமையாக பிரிக்கப்பட்டு, அந்த முழுமையான பிரிவினையை வருமான வரி அதிகாரி அங்கீகரிக்கும் வரை பிரிவினை அங்கீகரிக்கப்படாது. எனவே, பிரிந்து சென்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானமும் பரம்பரை சொத்து மூலம் கிடைக்கும் வருமானமாகவே வரி விதிப்புக்கு உட்படும் என நிபுணர் விளக்குகிறார்.

வரி சுமை

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மகளுக்கு சொத்தில் உரிய பங்கை வழங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடாது. அந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர் அனுபவித்தாலும், பரம்பரை சொத்து முழுமையாக பிரிக்கப்படும் வரை அந்த வருமானத்திற்கு குடும்பத்தினரே வரியை செலுத்த வேண்டும். அதாவது மகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்தாலும் அதன் வருமான வரியை குடும்பத்தினரே செலுத்த வேண்டும்.

எனவே, மகளின் சொத்துரிமையையும் பம்ரபரை சொத்துகளை பிரிக்கும்போது விதிக்கப்படும் வரி நிலவரத்தையும் தனித்தனியாகப் புரிந்துகொள்வது அவசியம். மகளுக்குப் பங்கு வழங்க வேண்டிய சட்ட உரிமை ஒருபுறம் இருக்க, பகுதியளவிலான பிரிவினையால் ஏற்படும் வரி சுமையையும் குடும்பத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+