சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் ஓராண்டு நீடிப்பு! மத்திய அரசு அறிவிப்பு! யார் இந்த பிரவீன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2023 மே மாதம் முதல் சிபிஐ இயக்குநராக இருந்து வருபவர் பிரவீன் சூட். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்தது. இதற்கிடையே இவருக்கு மேலும் ஒரு ஆண்டு பதவி நீடிப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் உள்ள முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சிபிஐ.. நாட்டின் பல முக்கிய வழக்குகளை சிபிஐ வெற்றிகரமாக விசாரித்துள்ளன. சிக்கலான வழக்குகளிலும் கூட குற்றவாளிகளை சிபிஐ சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்.

CBI Director Praveen Sood Granted One-Year Extension Until May 2026

இந்த சிபிஐ அமைப்பின் இயக்குநராக பிரவீன் சூட் இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருந்தது. அதன்படி அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அதை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை புதிய சிபிஐ இயக்குநரை நியமிப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தான் பிரவீன் சூட் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவையின் நியமனக் குழு பிரவீன் சூட்டிற்கு பதவி நீடிப்பை வழங்கியுள்ளது. மே 24ம் தேதி தொடங்கி அடுத்த ஓராண்டிற்கு அவரது பதவி நீடிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் சூட், கர்நாடக கேடரின் 1986 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர் கர்நாடக மாநில டிஜிபியாக பணியாற்றி வந்த போதுதான் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் பிறந்த பிரவீன் சூட், டெல்லி ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த பிறகு வெறும் 22 வயதில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார்.

மேலும், இவர் பெங்களூரில் உள்ள ஐஐஎம் மற்றும் நியூயார்க்கில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தின் மேக்ஸ்வெல் கவர்னன்ஸ் ஸ்கூலில் இருந்து முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் பிரவீன் சூட் தெளிவான விசாரணை நடத்துவார். சொத்து வழக்குகள் தொடர்ந்து, இரு மாநில பிரச்சினை, சர்வதேச விவகாரங்கள் வரை பலவற்றைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+