டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரியல் மங்காத்தா! 2019 ஐபிஎல் தொடரில் மாபெரும் சூதாட்டம்.. ஹவாலா கனேக்ஷன் வேறாம்... பரபரக்கும் சிபிஐ!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாகப் பரபர தகவல்களை சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் அணி மட்டுமே இப்போது வரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு

அடுத்த 3 இடங்களுக்காக மொத்தம் 5 அணிகள் போட்டியில் உள்ளன. இதனால் லீக் சுற்றுகள் மிகவும் பரபரப்பாகச் சென்று வருகிறது.

 ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் எப்படி ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமானதாக மாறி வருகிறதோ, அதேபோல ஐபிஎல் சுற்றி இருக்கும் சர்ச்சைகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சூதாட்ட சர்ச்சை தொடர்பாகச் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குக் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் சூதாட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

சிபிஐ

சிபிஐ

அதாவது சூதாட்டத்தில் ஈடுபட்ட தனிநபர்களின் நெட்வொர்க், பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் நெட்வொர்க்

பாகிஸ்தான் நெட்வொர்க்

இது தொடர்பாக சிபிஐ தரப்பில் கூறுகையில், "பாகிஸ்தானிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நெட்வொர்க் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐபிஎல் பெட்டிங் என்ற போர்வையில், அவர்கள் பொது மக்களை பெட்டிங் செய்யத் தூண்டி ஏமாற்றுகிறார்கள் பெட்டிங் செய்வதற்காகவே இந்த நெட்வொர்க் சில அடையாளம் தெரியாத வங்கி அதிகாரிகளுடன் இணைந்து போலி ஐடிகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளையும் தொடங்கி உள்ளனர்.

 ஹவாலா

ஹவாலா

இந்தியாவில் இதுபோன்ற பெட்டிங் மூலம் பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி, ஹவாலா பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள அவர்களின் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தகவல்களின்படி, தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, கடந்த 2010ஆம் ஆண்டு இந்த தனிநபர் நெட்வொர்க் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

 ஐபிஎல் 2019

ஐபிஎல் 2019

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 8 மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. அதில் சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பிளேஆப் சுற்றுகளின் முடிவில் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்மை அணிகள் மோதின. அதில் சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று இருந்தது.

English summary
A network of individuals involved in betting in IPL influenced matches held in 2019 based Pakistan inputs: (ஐபிஎல் பெட்டிங்கில் பாகிஸ்தான் குழுவுக்கு தொடர்பு) Pakistan based Betting in IPL 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X