டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு : மகாராஷ்டிரா, கேரளா, ம.பி.-க்கு மத்திய சுகாதாரத்துறை 'அலர்ட்'

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Recommended Video

    Delta + ஆக உருமாற்றம் அடைந்தது Delta வகை Coronavirus.. எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ?

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதியதாக டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடங்கி இருக்கிறது.

    கொரோனா 2-வது அலை பாதிப்புக்கு மிக முக்கியமானதாக இருந்தது டெல்டா வகை கொரோனா வைரஸ்கள்தான்.

    உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு

    மத்திய அரசு அறிவுறுத்தல்

    மத்திய அரசு அறிவுறுத்தல்

    தற்போது டெல்டா பிளஸ் கொரோனா, இந்தியாவில் 3-வது அலையை தொடங்கி வைக்கக் கூடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

    எங்கெல்லாம் பாதிப்பு?

    எங்கெல்லாம் பாதிப்பு?

    மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் கொவிட்-19-ன் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

     எப்படியான பாதிப்பு ஏற்படும்?

    எப்படியான பாதிப்பு ஏற்படும்?

    அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளது. ஆகையால் பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இந்த மாநிலங்கள் கூடுதல் செலுத்த வேண்டும்.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Union Health Ministry has alerted and advised Maharashtra, Kerala and Madhya Pradesh regarding the Delta Plus variant of COVID19 being found in some districts in these States.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X