டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முப்படைகள் தலைமை தளபதி பணி நியமன விதியில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: முப்படை தலைமை தளபதி பணி நியமன விதியில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ராணுவம, விமானம் மற்றும கப்பல் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் விமான விபத்தால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது பதவி இன்னமும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இந்த பதவிக்கு ஓய்வு பெற்று பணியில் உள்ள 62 வயதை கடக்காத முப்படைகளின் தளபதிகளில் ஒருவரை நியமிப்பது விதியாக இருந்தது.

Centre amends rules for appointment of next chief of defence staff

இந்த நிலையில்தான் இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 62 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள லெப்டினனட் ஜெனரல, ஏர் மார்ஷல், துணை அட்மிரல்களும் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    Pak JF17-ஐ சும்மா நிறுத்தி வைத்துள்ள Myanmar | Rajnath-த்திடம் Vietnam கோரிக்கை | அடுத்த CDS?

    இந்த புதிய விதி மாற்றலின் மூலம் முப்படைகளின் தலைமை தளபதி பணிக்கு 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் அதிகாரிகளும் தகுதியுள்ளவர்களாவார்கள். முப்படைகளின் தலைமை தளபதி பணியானது ராணுவ சீர்த்திருத்தங்களை செய்யும் மிகப் பெரிய பணியாகும். பாதுகாப்பு படைகளுக்கும் அரசுக்கும் இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் ஒரு பதவியாகும்.

    முன்பெல்லாம் நாட்டின் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தும் திட்டங்கள், பதவி உயர்வுகளை பெறுவது உள்ளிட்டவை அந்தந்த தலைமை அதிகாரியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் முதல்முறையாக ராணுவ விவகாரங்கள் துறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்த செயல்பாடுகள் அனைத்தும் ராணுவத்தின் கீழ் வந்துள்ளன.

    முப்படைகள் தொடர்பான ராணுவ விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணி முப்படைகளின் தலைமை தளபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Centre amends rules for appointment of next chief of defence staff. The age limit will be 62.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X