டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வ.உ.சி, வேலுநாச்சியாரை தெரியாதாம்..தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது

இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன.

12 மாநில மாடல்கள் மட்டுமே ஏற்பு

12 மாநில மாடல்கள் மட்டுமே ஏற்பு

அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

பிரபலம்

பிரபலம்

இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 ஆவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல் மேற்கு வங்காளத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து உள்ளது.

கேரளாவின் அலங்கார ஊர்தியும் நிராகரிப்பு

கேரளாவின் அலங்கார ஊர்தியும் நிராகரிப்பு

கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இவர், 'ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம்' என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இவரின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

English summary
Centre rejects the model of Tamilnadu government's decorative vehicle ahead of Republic Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X