உலகின் சில பகுதிகளில்.. கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன.. மத்திய அரசு வார்னிங்
டெல்லி: உலகின் சில பகுதிகளில் கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது.
இருப்பினும், கொரோனா முழுவதுமாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மூன்றாம் அலை
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால், "கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் உலகின் பல இடங்களில் தோன்றத் தொடங்கிவிட்டன. இப்போது உலகெங்கும் தினசரி 3.9 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாம் அலை ஏற்பட்ட சமயத்தில் உலகில் தினசரி ஒன்பது லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது பலநாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி
கொரோனா மூன்றாம் அலையை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடியும்கூட அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் கவனக்குறைவாக இருந்தால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் பிரதமர் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தடுப்பூசி பற்றாக்குறை
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நிலை விரைவில் மாறும். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மாநில அரசுகள் இதில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

மாஸ்க் அணியும் பழக்கம்
அதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், "கடந்த சில வாரங்களாகப் பொதுமக்கள் மாஸ்க் அணியும் பழக்கம் குறைந்துள்ளது. மாஸ்க் அணிவதால் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்" என்று அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications