டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுவின் அடுத்த அதிரடி.. நவ. 22ல் டெல்லியில் கூட்டம்.. எதிர்க்கட்சிகள் அணி திரள்கின்றன

22-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

புதுடெல்லி: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, அடுத்த கட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் நகர்ந்துள்ளன. அதன்படி, டெல்லியில் வரும் 22ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

வரப்போகிற தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சிகள் அமைத்து வருகின்றன. இதற்காக பிரதான கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி வருகிறார்கள்.

 மோடியை சந்தித்து பேசியுள்ளேன்.. எனது கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும்.. ராஜபக்சே பரபர பேட்டி மோடியை சந்தித்து பேசியுள்ளேன்.. எனது கருத்தை இந்தியா புரிந்து கொள்ளும்.. ராஜபக்சே பரபர பேட்டி

பாஜக வீழ்த்த திட்டம்

பாஜக வீழ்த்த திட்டம்

முக்கியமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போன்றோர் பாஜகவை வீழ்த்த திட்டங்களை கையில் எடுத்து வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சிகள்

பிரதான எதிர்க்கட்சிகள்

ஆனால் இதில் முழு வீச்சில் இறங்கி இருப்பது சந்திரபாபு நாயுடுதான். ராகுல் காந்தி, தேவகவுடா, குமாரசாமி, சீதாராம்யெச்சூரி, பரூக் அப்துல்லா, முலாயம்சிங் யாதவ், சரத்பவார், இறுதியாக ஸ்டாலின் என களத்தில் இறங்கி ஒருத்தரை விடாமல் நேரில் சந்தித்து பேசி பாஜகவுக்கு எதிராக அணி திரள அறைகூவல் விடுத்து வருகிறார். எல்லோரையும் சந்தித்து ஒருங்கிணைத்து அதில் ஓரளவு வெற்றியை எட்டிவரும் சந்திரபாபு, அடுத்த கட்டமாக பாஜகவுக்கு எதிரான கட்சிகளை அழைத்து பேசவும் முடிவெடுத்துள்ளார்.

22-ந் தேதி கூட்டம்

22-ந் தேதி கூட்டம்

அதற்காக வருகிற 22ம் தேதி டெல்லியில் இந்த கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் ஒன்று திரண்டுள்ள அணியை எப்படி முன்னெடுத்துசெல்வது என்பது குறித்தும், அமைப்பு ரீதியான கட்டமைப்பு உருவாக்குவது பற்றியும், வரப்போகிற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பல்வேறு முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இக்கூட்டத்தில் கூட்டணி குறித்தும் முடிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த கூட்டம் இந்திய அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும், பாஜகவை திணற வைக்க கூடிய கூட்டமாகவும் நிச்சயம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

{document1}

English summary
Chandrababu Naidu has called for a meeting of all non bjp parties on 22nd
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X