டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேறிய சந்திரயான் 2... நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது!

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    டெல்லி: சந்திரயான் 2 இன்று அதிகாலை வெற்றிகரமாக பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிலவை நோக்கி அனுப்பப்பட்டது.

    கடந்த 22ம் தேதி மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

    சந்திரயான் 2 செலுத்தப்பட்ட முதல்நாள் பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்ற தொடங்கியது. இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்தது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து தூரமாக செல்லும். இதன் மூலம் பூமியை விட்டு தூரம் சென்று அதன்பின் நிலவை நோக்கி செல்லும்.

    15 முறை மாறும்

    15 முறை மாறும்

    மொத்தம் 15 முறை சந்திரயான் 2 இதற்காக திசை மாற்றப்படும். கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு நகர்த்தி செல்லப்படும். இதற்காக அதில் உள்ள எஞ்சின் 15 முறை கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்படும். இப்படியாக பூமியைவிட்டு 23 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 விலகி செல்லும். அந்த 23 நாட்கள் இப்போது முடிந்துவிட்டது.

    எப்படி

    எப்படி

    கடந்த 6ம் தேதி சந்திரயான் 2 இதேபோல் வட்டப்பாதையை மாற்றப்பட்டது. இதுவரை 5 முறை சந்திரயான் 2வின் வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு நகர்ந்து சென்று கொண்டு இருந்தது. இதையடுத்து இன்று 6வது முறையாக வட்டப்பாதையை மாற்றப்பட்டு பூமியைவிட்டு சந்திரயான் 2 வெளியேற்றப்பட்டது.

    அதிகாலை

    அதிகாலை

    இன்று அதிகாலை பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சந்திரயான் 2 வெளியேற்றப்பட்டது. இன்று அதிகாலை 2.21 மணிக்கு நிலவை நோக்கி திருப்பப்பட்டது. இதன் மூலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது சந்திரயான் 2.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் பயன்படுத்தப்பட்டது. இனி நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 செல்லும். இன்னும் 6 நாட்களில் நிலவின் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். அதன்பின் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு இறங்கும்

    அங்கு இறங்கும்

    இன்னும் 24 நாட்களில் சந்திரயான் 2 நிலவை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவில் ஆராய்ச்சிகளை செய்யும்.

    English summary
    Chandrayaan-2 successfully left the earth orbit: Starts its journey towards moon early morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X